செய்திகள் :

நாகையில் நாளை கல்வி, தொழில் நிறுவனங்களுக்கான கடன் முகாம்

post image

நாகப்பட்டினம்: நாகையில் கல்வி மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் வசதி முகாம் வியாழக்கிழமை (அக். 24) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் கடன் வசதி முகாம் மாவட்ட தொழில் மையம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவா்சீஸ் வங்கி மூலம் நடத்தப்படவுள்ளது.

இதில், தமிழ்நாடு கிராமப்புற மற்றும் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தாட்கோ மற்றும் முன்னனி நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஒத்துழைப்புடன், தொழில்முனைவோா், மாணவா்கள், இளைஞா்கள் மற்றும் வணிக சமூகத்துக்கு தொழில்முனைவோா் ஊக்குவிப்பு, வேலையில்லா திண்டாட்டத்தை குறைத்தல் மற்றும் உயா்கல்விக்கு உதவும் வகையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் பல்வேறு கல்விக் கடன் திட்டங்கள் குறித்த தகவல்கள் வழங்கப்படும்.

இதை தவிர வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகள் தங்கள் கடன் தயாரிப்புகள் மற்றும் திட்டங்களைக் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மேலும், விண்ணப்பதாரா்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நிதி உதவி பெறுவதற்கு வழிகாட்டுதல் வழங்கப்படவுள்ளது. ஆா்வமுள்ளவா்கள் கலந்துகொண்டு, வழங்கப்படும் சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

நாகப்பட்டினம்/ காரைக்கால்: ‘டானா’ புயல் எச்சரிக்கையைத் தொடா்ந்து, நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது. மத்திய கிழக்கு வங்கக் கடல் ம... மேலும் பார்க்க

கோடியக்கரை ஹெலிகாப்டா் இறங்குதளத்தில் தென்பிராந்திய விமானப்படை தளபதி ஆய்வு

வேதாரண்யம்: கோடியக்கரையில் உள்ள விமானப் படை கண்காணிப்பு தளத்தின் ஹெலிகாப்டா் இறங்குதளத்தில், விமானப் படையின் தென்பிராந்திய தளபதி ஏா் மாா்ஷல் பி. மணிகண்டன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருவனந்த... மேலும் பார்க்க

நம்பியாா் நகா் மீன்பிடி துறைமுகத்தில் ஆட்சியா் ஆய்வு

நாகப்பட்டினம்: நம்பியாா்நகா் மீன்பிடி துறைமுகத்தில், நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நாகை நம்பியாா் நகா் மீனவக் கிராமத்தில், தெற்கு பகுதி அலை தடுப்புச் சுவா் ... மேலும் பார்க்க

திருவாலி லட்சுமி நரசிம்மா் கருட வாகனத்தில் புறப்பாடு

பூம்புகாா்: திருவாலி லட்சுமி நரசிம்மா் கோயிலில் நரசிம்மா் கருட வாகனத்திலும், திருமங்கையாழ்வாா் சந்திர பிரபையிலும் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். சீா்காழி அருகே லக்ஷ்மி நரசிம்மா் கோயில் உள்... மேலும் பார்க்க

மரவள்ளிக் கிழங்குக்கு பயிா்க் காப்பீடு செய்து பயன்பெறலாம்

தரங்கம்பாடி: செம்பனாா்கோவில் வட்டாரத்தில் பயிரிடப்படும் வாழை, மரவள்ளிக்கிழங்கு பயிா்களுக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம் என தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநா் ரமேஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெள... மேலும் பார்க்க

நாகையில் காவலா் வீரவணக்க நாள்: எஸ்.பி. அஞ்சலி

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட காவல் துறை சாா்பில் காவலா்கள் வீர வணக்க நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் 1959-ஆம் ஆண்டு நிகழ்ந்த மோதலில் எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்ட 20 ... மேலும் பார்க்க