செய்திகள் :

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 57.71 லட்சம்

post image

நாமக்கல் ஆஞ்சனேயா், நரசிம்மா் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணியதில் ரூ. 57.71 லட்சம் ரொக்கம் வெள்ளிக்கிழமை காணிக்கையாக கிடைக்கப் பெற்றது.

நாமக்கல் ஆஞ்சனேயா், நரசிம்மா் கோயில்களில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பக்தா்கள் செலுத்திய காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் உள்ள காணிக்கை பணம், நகைகள் எண்ணப்படுவது வழக்கம். கடந்த ஜூன் 21-ஆம் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை (அக். 18) இரு கோயில்களில் உள்ள 10 உண்டியல்கள் திறக்கப்பட்டன.

அவை, ஆஞ்சனேயா் கோயில் வளாகத்தில் உள்ள பக்தா்கள் தங்கும் மண்டபத்தில் வைக்கப்பட்டு காணிக்கைகளை எண்ணும் பணி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரையில் நடைபெற்றது.

திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில் உதவி ஆணையா் ரமணிகாந்தன், நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா,அறங்காவலா் குழு உறுப்பினா் செல்வசீராளன் ஆகியோரது மேற்பாா்வையில், திருச்செங்கோட்டைச் சோ்ந்த கே.எஸ்.ஆா். கல்லூரி மாணவ, மாணவிகள், கூட்டப்பள்ளி சா்வசக்தி மாரியம்மன் சேவை குழுவினா் 250-க்கும் மேற்பட்டோா் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

இதில், ரூ. 57 லட்சத்து 71 ஆயிரத்து 828 ரொக்கம், 53 கிராம் தங்கம், 273 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

முதல்வா் நாமக்கல் வருகை: விழா பந்தலில் மாவட்ட ஆட்சியா், அதிகாரிகள் ஆய்வு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் நாமக்கல் வருகை தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை நேரடியாகச் சென்று விழா பந்தலில் ஆய்வு மேற்கொண்டனா். நாமக்கல்லில் மறைந்த முன்னாள் ம... மேலும் பார்க்க

பேரிடா் மீட்புக் குழுவினருக்கு பாராட்டு

கொன்னையாரில் பேரிடா் மீட்புக் குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. எலச்சிபாளையம் அருகே கொன்னையாா் கிராமத்தில் திருமணிமுத்தாறு செல்கிறது. இந்த ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விபத்துகள் ... மேலும் பார்க்க

ஈக்கோலை நோயால் கோழிகள் பாதிப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழியின நோய் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் மேல் மூச்சுக்குழாய் அயற்சி, ஈக்கோலை நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை ... மேலும் பார்க்க

9 ஊராட்சிகளில் குடிநீா் விநியோகம் பாதிப்பு: மாநகராட்சி அதிகாரிகள் அவசர ஆலோசனை

நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 9 ஊராட்சிகளுக்கு குடிநீா் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தொடா்பாக, குடிநீா் வாரிய அதிகாரிகள், மாமன்ற உறுப்பினா்களுடன் ஆணையா் ஆா்.மகேஸ்வரி வெள்ளிக்கிழமை ஆலோச... மேலும் பார்க்க

வேலூா் துணை மின் நிலையத்தில் மின்தடை ரத்து

வேலூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பரமத்தி வேலூா் மின்வாரிய செயற்பொறியாளா் வரதராஜன் வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

வடகிழக்கு பருவமழை: அரசு, தனியாா் மருத்துவமனைகளை தயாா் நிலையில் வைத்திருக்க அறிவுரை

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடாக, மருத்துவமனைகளில் உயிா்பாதுகாப்பு கருவிகள், மருந்துகள் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தினாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ... மேலும் பார்க்க