செய்திகள் :

`நீங்கள் துணை முதல்வரா.. தமிழின எதிர்ப்பாளரா? உங்கள் பதவி பறிக்கப்படுமா?'- உதயநிதிக்கு வானதி கேள்வி

post image
தமிழக அரசு நிகழ்வில் தமிழ்த் தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து நீங்கள் துணை முதல்வரா? அல்லது தமிழின எதிர்ப்பாளரா? என உதயநிதி ஸ்டாலினுக்கு, கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடல் பாடப்படும் போது 'திராவிட நல் திருநாடும்' எனும் வரிகள் இல்லாமல் பாடப்பட்டது. அது தொடர்பான விவாதம் தொடர்ந்த நிலையில், ஆளுநர் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு துறை ஆலோசனைக் கூட்டங்களிலும், தமிழ்நாடு அரசு விழாக்களிலும் தமிழ்த் தாய் வாழ்த்து பாடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசின் திட்டம் மற்றும் செயலாக்கத்துறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றிருந்தார்.

உதயநிதி ஸ்டாலின்

கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்பொழுது தமிழ்த்தாய் வாழ்த்தில் சில வரிகள் முழுமை பெறாமல் சிறு தடங்கல்கள் ஏற்பட்டது. உடனடியாக மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கப்பட்டு நிகழ்ச்சி தொடங்கியது. அதைத் தொடர்ந்து, அரசு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து சரியாகப் பாடப்படவில்லை எனக் குற்றம்சாட்டப்பட்டது. இது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில் "அரசு நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தவறாகவெல்லாம் பாடப்படவில்லை. பாடல் பாடப்படும் போது மைக் சரியாக வேலை செய்யவில்லை. “Technical Fault” தான். இரண்டு, மூன்று இடங்களில் பாடப்படுபவரின் குரல் கேட்கவில்லை. அதனால் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முழுமையாக கேட்கும்படி பாடப்பட்டது.

அதைத் தொடர்ந்து தேசிய கீதமும் முறையாகப் பாடப்பட்டது. இதை ஒரு பிரச்னையாக மாற்றவேண்டாம்" என உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்திருக்கிறார். இந்நிலையில் உதயநிதியை விமர்சித்து வானதி சீனிவாசன் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில், "நீங்கள் துணை முதல்வரா அல்லது தமிழின எதிர்ப்பாளரா திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களே ? நீங்கள் பங்கேற்கும் விழாவில் நமது தமிழ்த்தாய் வாழ்த்து சரியாக பாடுவதைக்கூட உறுதிசெய்ய தவறிய உங்களுக்கு துணை முதல்வராக நீடிப்பதற்கு என்ன தகுதி இருக்கிறது?

இதுதான் நீங்கள் தமிழ் மொழியைக் கட்டிக் காக்கும் லட்சணமா? தவறாகப் பாடுவது காணொளியில் தெளிவாக தெரியும் போது, செய்த தவறை மறைக்க “Technical Fault” என்று புது விதமாக முட்டுக் கொடுப்பது ஏன்? ஆளுநர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்டுவிட்டது என கூறி தமிழக ஆளுநரின் மீது இனவெறி சாயத்தைப் பூசிய உங்கள் தகப்பனார், உங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாகப் பாடியதாக பொய்ப் புகார் கூறி ஆளுநரை திரும்ப பெறவேண்டும் என்று மத்திய அரசிடம் மல்லுக்கட்டினீர்களே, நீங்கள் பங்கேற்ற விழாவிலேயே தமிழ்த்தாய் வாழ்த்து தவறாகப் பாடப்பட்டுள்ளதே, உங்கள் பதவி பறிக்கப்படுமா?" என்று கேள்வி எழுப்பி உதயநிதி ஸ்டாலினை விமர்சித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

`திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுவது உறுதி' - அடித்துச் சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்

வருகின்ற 30-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் நடைபெறுகின்ற முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி நிகழ்ச்சியில், நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்தை வங்கி லாக்... மேலும் பார்க்க

Irfan : வீடியோ சர்ச்சை; வெளிநாட்டில் யூடியூபர் இர்ஃபான்... சென்னை திரும்பியதும் நடவடிக்கை பாயுமா?!

தனது மனைவியின் பிரவசத்தையும், குழந்தையின் தொப்புள்கொடியை தானே வெட்டுவதும் போன்ற சர்ச்சை வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் யூடியூபர் இர்ஃபான் வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பி... மேலும் பார்க்க

TVK: விஜய் உடன் இணைகிறாரா சகாயம்?! - வெளியான தகவலும் பின்னணியும்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விக்கிரவாண்டியில், வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. தனது கட்சித் தொண்டர்களுக்கு இதுவரை மூன்று கடிதங்கள் எ... மேலும் பார்க்க

புதுச்சேரி: "தவறு செய்யும் சுற்றுலாப் பயணிகளை விட்டுவிடலாமா?" – முதல்வர் கருத்தும், அமைச்சர் பதிலும்

சுற்றுலா மாநிலமான புதுச்சேரிக்குத் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து, நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக வெள்ளிக்கிழமை மாலை வரும் அவர்கள், ப... மேலும் பார்க்க

TVK: `எம்.ஜி.ஆர், சிவாஜி, விஜயகாந்த்...' - நடிகர்களின் அரசியல் பிளாஷ்பேக்

நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடக்கவிருக்கிறது. தமிழ் சினிமா நடிகர்கள் அரசியலில் ஈடுபடுவது புதிதல்ல. நம் நாட்டில் அரசியலும் சினிமாவும் இரண்டறக் கலந்ததாகவே இருந்துவருகிற... மேலும் பார்க்க