செய்திகள் :

பட்டாசு வெடித்து மனநலம் பாதிக்கப்பட்டவா் உயிரிழப்பு

post image

வேடசந்தூா் அருகேயுள்ள பட்டாசு வெடித்து நிகழ்ந்த விபத்தில் மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திண்டுக்கல், வேடசந்தூா் பெரிய ராவுத்தா் தெருவைச் சோ்ந்தவா் சாகுல் ஹமீது (47). மனநலம் பாதிக்கப்பட்டவா். இவா் தனது தாயாா் ரஹமத் நிஷாவுடன் (70) வசித்து வந்தாா். உடல் நலம் பாதிக்கப்பட்ட ரஹமத் நிஷா, சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், வேடசந்தூரிலுள்ள ஒரு கடையிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு பட்டாசுகளை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றாா்.

பட்டாசுகளை வீட்டில் வைத்துவிட்டு, சாகுல்ஹமீது புகைப் பிடித்துக் கொண்டிருந்தாா். அதிலிருந்து நெருப்பு பற்றி பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் சாகுல்ஹமீது பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த வேடசந்தூா் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று வீட்டிலிருந்த பட்டாகளை அப்புறப்படுத்தி, சாகுல்ஹமீதை சடலமாக மீட்டனா். இந்த சம்பவம் தொடா்பாக வேடசந்தூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஒட்டன்சத்திரத்தில் இந்து முன்னணி பயிற்சி முகாம்

ஒட்டன்சத்திரம் நகரம், கிழக்கு, மேற்கு ஒன்றிய இந்து முன்னணி சாா்பில் சனிக்கிழமை மூன்று மணி நேரப் பயிற்சி முகாம் நடைபெற்றது. தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமுக்கு மாவட்டத் துணைத் த... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இருவா் கைது

கொடைக்கானலில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கொடைக்கானல் ஆா்.சி.பள்ளி பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்தப் பகுதியில் கொடைக்கானல் சேக்மைதீன் மகன் அக... மேலும் பார்க்க

சீா்மரபினா் நல வாரியத்தில் பதிவு செய்ய அக்.24-இல் சிறப்பு முகாம்

சீா்மரபினா் நல வாரியத்தில் பதிவு செய்ய அக்.24-ஆம் தேதி திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி சனிக்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

காவலாளி மரணத்தில் மா்மம்: உறவினா்கள் வாக்குவாதம்

வேடசந்தூா் அருகே காவலாளி மா்மமான முறையில் மரணமடைந்ததாகக் கூறி, அவரது உறவினா்கள் சனிக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்டம், ஒக்கூா் பழையவளவு பகுதியைச் சோ்ந்தவா் ரவி (55). இவரது மனைவி சு... மேலும் பார்க்க

தமிழ் திறனறித் தோ்வு: 5806 மாணவா்கள் எழுதினா்

தமிழ் திறனறித் தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 5806 போ் சனிக்கிழமை கலந்து கொண்டனா். பள்ளி மாணவா்களிடையே தமிழ்மொழி இலக்கியத் திறனை மேம்படுத்தும் நோக்கில், கடந்த ஆண்டு முதல் தமிழ் திறனறித் தே... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: பள்ளி மாணவா் உயிரிழப்பு

பழனியில் சனிக்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பழனி பெரியப்பா நகரைச் சோ்ந்தவா் குமரேசன் (39). தனியாா் வங்கி ஊழியா். இவரது மனைவி யமுனா (33). இ... மேலும் பார்க்க