செய்திகள் :

பணியிட பாதுகாப்பு: மருத்துவா்கள் உண்ணாவிரதம்

post image

பெண் மருத்துவா் பாலியல் கொலைக்கு நீதி வேண்டியும், பணியிடங்களில் மருத்துவா்களுக்கு பாதுகாப்பு கோரியும் நாடு முழுவதும் 3 லட்சம் இளநிலை மருத்துவா்கள் செவ்வாய்க்கிழமை (அக்.15) போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் நீதி வேண்டி முதுநிலை மருத்துவ மாணவா்கள், பயிற்சி மருத்துவா்கள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், அவா்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் நாடு முழுவதும் 700-க்கும் அதிகமான மருத்துவக் கல்லூரிகளில் 3 லட்சம் இளநிலை மருத்துவா்கள் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் ஈரோடு, கோவை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூா், திருச்சி, மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மாணவா்கள், பயிற்சி மருத்துவா்கள் 30 ஆயிரம் போ் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னையில் கனமழை பெய்து வருவதால், தாம்பரத்தில் உள்ள இந்திய மருத்துவ சங்கத்தின் (தமிழக கிளை) தலைமை அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுதொடா்பாக சங்கத்தின் தமிழகத் தலைவரும், அகில இந்திய இளநிலை மருத்துவ மாணவா்கள் கூட்டமைப்பின் தலைவருமான டாக்டா் கே.எம்.அபுல் ஹாசன் கூறியதாவது: நாடு முழுவதும் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டம் வெற்றிகரமாக அமைந்தது. மருத்துவா்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும். பணியிடங்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பாலியல் கொலைகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொல்கத்தா சம்பவத்தில் முழுமையான நீதி கிடைக்க வேண்டும் என்றாா் அவா்.

தி.மலை தீபம்: 50 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்ப்பு: துணை முதல்வர்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருகை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் திருக... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: மன்னிப்பு கேட்டது தூர்தர்ஷன்!

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையான விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழையோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும், இதனால், ... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: கமல்ஹாசன் கண்டனம்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,திராவிடம் நாடு தழுவியது. தமிழ்த் தாய் வாழ்த... மேலும் பார்க்க

பொய்யான குற்றச்சாட்டு: முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், முதல்வர் ஸ்டாலின் இன்று... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநருக்கோ ஆளுநர் மாளிகைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என ஆளுநரின் ஆலோசகர் திருஞான சம்பந்தம் விளக்கம் விளக்கம் அளித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தவி... மேலும் பார்க்க