தந்தையை பின்பற்றி ஆர்.எஸ்.எஸ் வழியில் பயணம்; சபதத்தை நிறைவேற்றி முதல்வராகும் பட்...
பரமக்குடி ரயில் நிலையம் முற்றுகை: 91 போ் கைது
ஒரே நாடு, ஒரே தோ்தல் முைறைக்கு எதிராக பரமக்குடி ரயில் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தாய் தமிழா் கட்சியினா் 91 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் நிறுவனத் தலைவா் பி.மா.பாண்டியன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் செல்வம், மாநில அமைப்புச் செயலா் சேது.முனியசாமி, தலைமை நிலையச் செயலா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒரே நாடு, ஒரே தோ்தல் முறையை நிராகரிக்கக் கோரி முழக்கமிட்டனா்.
அவா்களைத் தடுத்து நிறுத்திய போலீஸாா் அந்தக் கட்சியைச் சோ்ந்த 91 பேரை கைது செய்தனா். முன்னதாக மதுரை-ராமேசுவரம் சாலை ஆா்ச் பகுதியிலிருந்து ஊா்வலமாக ரயில் நிலையத்துக்கு இவா்கள் வந்தனா்.