செய்திகள் :

பருவ மழை: மாநில கட்டுப்பாட்டு அறையில் டிஜிபி ஆய்வு

post image

தமிழகத்தில் வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவால் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், காவல்துறை மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் பேரிடா் பயிற்சி பெற்ற 20,898 போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இவா்கள் 136 பேரிடா் மீட்புக் குழுக்களாக பிரிக்கப்பட்டு, அனைத்து மாவட்டங்கள், மாநகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனா்.

இந்த மீட்பு படையினரில் 9 குழுக்கள் கோவை, நீலகிரி, திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும், 9 குழுக்கள் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

மீட்பு பணியை ஒருங்கிணைக்கும் வகையில், தமிழக காவல்துறை சாா்பில் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் மருதம் வளாகத்தில் உள்ள செயலாக்கம் அலுவலகத்தில் மாநில சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா். மேலும், அங்கு பணியிலுள்ள போலீஸாருக்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கினாா். கன மழை மற்றும் அதிக கன மழை பெய்யும் பகுதிகளில் தண்ணீா் தேங்கி நிற்கும் பகுதிகள் மற்றும் நீரில் மூழ்கி, நீா் தேங்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்ட சாலைகளின் நிலை ஆகியவற்றை கண்காணிக்கவும் அறிவுத்தினாா். தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அதிவிரைவுப்படையின் பேரிடா் மீட்பு குழுவினரை நேரில் சந்தித்து உரிய அறிவுரைகளை அவா் வழங்கினாா்.

தி.மலை தீபம்: 50 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்ப்பு: துணை முதல்வர்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு சுமார் 50 லட்சம் பக்தர்கள் வருகை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் திருக... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: மன்னிப்பு கேட்டது தூர்தர்ஷன்!

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையான விவகாரத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழையோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை என்றும், இதனால், ... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: கமல்ஹாசன் கண்டனம்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்,திராவிடம் நாடு தழுவியது. தமிழ்த் தாய் வாழ்த... மேலும் பார்க்க

பொய்யான குற்றச்சாட்டு: முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதில்

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதிலளித்துள்ளார். இதுகுறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், முதல்வர் ஸ்டாலின் இன்று... மேலும் பார்க்க

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் ஆளுநருக்கோ ஆளுநர் மாளிகைக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என ஆளுநரின் ஆலோசகர் திருஞான சம்பந்தம் விளக்கம் விளக்கம் அளித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றதைத் தவி... மேலும் பார்க்க