செய்திகள் :

பாலய்யா வஸ்தாவய்யா 3: ஒரு விக்குக்கு இத்தனை அக்கப்போரா? - போலீஸையே சுற்றலில் விட்ட பாலய்யா

post image
அது ஒரு ஏப்ரல் மாதத்தின் உச்சந்தலையில் உளி வைத்து அடிக்கும் வெயில் பொழுது...

ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் பாலய்யாவின் வீடு பரபரப்பில் இருந்தது. காவல்துறை வாகனங்களும், அவரது தனியார் பாதுகாப்புப் படையும் வீட்டுக்குள் போவதும் வருவதுமாக இருந்தார்கள். அக்கம்பக்கத்தினர் நம்ம பாலய்யாவுக்கு என்ன ஆச்சு என கவலை தோய்ந்த முகத்தோடு எட்டிப்பார்த்த வண்ணம் இருந்தனர். காவல் துறை இணை ஆணையர் வாகனம் கட்டக் கடைசியாக போய் வந்த பிறகு பாலய்யா தன் வாகனத்தில் கிளம்பிப் போனார். 'அப்பாடா!' என நிம்மதிப்பெருமூச்சு விட்டனர். ஆனால், அன்று காலையில் நடந்ததே வேறு...

பாலகிருஷ்ணா வெளிநாடு உள்நாடு எப்போது ஷூட்டிங் கிளம்பினாலும் அவரின் பெர்ஷனல் ஹேர் டிரஸ்ஸர் கொப்பிஷெட்டி வாசுவும் தனிக்கார் அல்லது விமானத்தில் கிளம்பிப் போவார். சந்து என்ற பிரபல சிகையலங்கார நிபுணர் வடிவமைத்த விக்குகள் வாசுவோடு லக்கேஜில் பயணிக்கும். ஒரு படத்தில் கமிட் ஆகும்போதே அந்தப் படத்துக்கான விக்குக்கென பட்ஜெட்டையும் சேர்த்துதான் சம்பளமே பேசுவார் பாலய்யாவின் மேனஜர்.

காரணம் விக்குகள் உலகத்தரத்தில்...அலர்ஜி உண்டு பண்ணாத வகையில் அமெரிக்காவிலிருந்து ஸ்பெஷலாய் தயாரித்து வரவழைக்கப்பட்டவை. சமீபத்தில் 'அகண்டா' படத்தில் அவர் பயன்படுத்திய மூன்று விக்குகளின் மொத்த மதிப்பு 39 லட்ச ரூபாய். அப்படி செலவு பண்ணி வாங்கும் விக்குகளை பத்திரப்படுத்தி வைக்க பிரத்யேக அறை ஒன்றை வீட்டில் வைத்திருக்கிறார் பாலய்யா. சொந்தக்காரர்கள் கூட அந்த அறையைப் பார்க்க அனுமதியில்லை

இப்போது அன்றைய தினம் காலையில் நடந்த சம்பவத்துக்கு வருவோம். வழக்கம்போல அதிகாலை எழுந்து ஷூட்டிங்கிற்கு ராமோஜி ராவ் ஸ்டூடியோவுக்குக் கிளம்பியிருக்கிறார் பாலய்யா. விக் எதுவும் அணியாமல் தொப்பியோடு கிளம்பியவர், வழக்கம்போல கொப்பிஷெட்டி வாசு மூலம் வரவழைக்கப்பட்ட ஒரேயொரு விக்கிற்காக ஸ்டூடியோவில் தனியறையில் காத்திருந்தார். அன்று ஒரு காரில் உதவியாளர் மூலம் விக் பாலய்யா இருக்கும் அறைக்கு

சூட்கேஸில் வந்தது. வாசு ஆர்வத்தோடு பெட்டியைத் திறந்து பார்த்தால் அதில் வெறும் கவர் மட்டுமே இருந்தது. விக்கைக் காணவில்லை. எப்படி மிஸ்ஸானது என அவருக்குப் புரியாமல் குழம்பிப் போனார் உதவியாளர். பாலய்யா கோபத்தின் உச்சத்துக்கேச் சென்றார்.

"சம்பேஸ்தானு ரா!" என ஒரு அடியும் கொடுத்தார். உதவியாளருக்கு ஒன்றுமே புரியவில்லை. 'இன்னிக்கு பாலய்யா காரு படையல் போட்ருவார். விக் கிடைத்தால் ஏடு கொண்டல வாடா உனக்கு ஸ்பெஷலா அர்ச்சனை பண்ணுறேன் சாமி' என மனதிற்குள் வேண்டிக்கொண்டார்.

காலையில் உள்ளே வைத்தபோது விக் இருந்தது என்று உறுதியாகச் சொன்னார் அந்த அப்பாவி உதவியாளர். ஷூட்டிங் நேரமும் நெருங்கிவிட வேறொரு விக்கை வரவழைக்கலாம் என யோசனை சொன்னார் வாசு. அந்த யோசனையை நிராகரித்த பாலய்யா காவல்துறையை வரவழைத்தார். பல லட்சம் பெருமானமுள்ள விக் களவு போய்விட்டது என புகார் கொடுத்தார். வாசுவின் வீடு, பிரத்யேக சலூன் வரை சல்லடை போட்டுத் தேடினார்கள். அந்த அப்பாவி உதவியாளரை தனியாக வைத்து விசாரித்தார்கள். அன்றைய தினம் ஷூட்டிங் கேன்சல் ஆனதால் கோபத்தோடு வீட்டுக்கு வந்தார் பாலய்யா. ஒருநாள் கால்ஷீட் போனதைவிட ஆசை ஆசையாய் வரவழைத்த காஸ்ட்லி விக் போய்விட்டதே என்ற கோபம் வேறு சேர்ந்து கொண்டது. மீடியாவில் வெளியானால் கேலி பண்ணுவார்கள் என்பதால் காதும் காதும் வைத்ததைப்போல தேடச் சொன்னார்.

அமெரிக்காவிலிருந்து டெலிவரியானதிலிருந்து அதைப் பார்த்தவர்கள், தொட்டவர்கள், குவாலிட்டி செக் செய்தவர்கள் என லிஸ்ட் போட்டு விசாரணை தொடங்கியது. இன்னொரு பக்கம் தனக்கு 'ஆகாதவர் கோஷ்டி' என ஒரு லிஸ்ட் சொன்னார். காவல்துறையோ, "ஒரு விக்குக்கு இத்தனை அக்கப்போரா?" என மனதிற்குள் புழுங்கினர். ஒரு நாற்பது வயது இணை ஆணையர் தான் கடைசியில் விக்கை மீட்டுக் கொடுத்தார். அது பாலய்யாவின் வீட்டில்தான் இருந்தது. முந்தைய நாள் இரவில் விக்கை வாங்கி மாட்டிப் பார்த்து உதவியாளரிடம் கவனக்குறைவாக வெறும் கவரை மட்டும் உள்ளே வைத்து 'பத்திரமாக' கொடுத்தனுப்பியிருக்கிறார். அந்த அப்பாவி உதவியாளரும் அதைக் கவனிக்கவில்லை. அதற்கான விலைதான் கொஞ்சம் அடி.

"ஐயோ, ஸாரி தம்முடு" என அந்த அப்பாவி உதவியாளரைக் கட்டிப்பிடித்து மன்னிப்பு கேட்டதோடு மிகப் பெரிய தொகையையும் கொடுத்து சமாதானப்படுத்தியிருக்கிறார். இப்படி கவனக்குறைவாக தப்பு பண்ணிவிட்டு, உடனடியாக மன்னிப்பு கேட்பதும் பாலய்யாவின் பாலிசி தான். விக் விஷயத்தில் டென்ஷன் ஆவதற்கும் காரணம் இருக்கிறது. இவரது ஆரம்பகால படங்களில் அடர்த்தியான சிகை அலங்காரத்தோடு வளைய வந்தவர் இவர். தன் ஸ்டைலில் முக்கிய பங்கு வகிப்பதே ஹேர் ஸ்டைல் தான் என உறுதியாக நம்புவார். அதனால்தான் முடி உதிர்ந்ததைத் தாங்கிக் கொள்ளாமல் விக்கிற்கு 'ஜே' சொல்லியிருக்கிறார். ஹேர் டிரான்ஸ்ப்ளாண்ட் பண்ண முயற்சி செய்து ஏதாவது பக்க விளைவு வந்துவிடும் என அதைத் தவிர்த்துவிட்டார்.

சில வருடங்களுக்கு முன்பு வரை இமேஜ் பற்றி கவலைப்படாமல் ரஜினிகாந்த் சத்யராஜ் போல் வழுக்கைத் தலையோடு பொது நிகழ்ச்சிகளில் 'தலை' காட்டுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். ஒரு புதுப்படத்தின் துவக்க விழா நிகழ்ச்சியில் அதன் 2கே கிட் ஹீரோ ஒருவர், 'அங்கிள் பாலய்யா காரு' என்று அழைத்தது பிடிக்காமல் அதே மேடையில் செல்போனைத் தூக்கியெறிந்து கோபத்தை பதிவு செய்தார். அந்த அளவுக்கு கோபக்கார கோங்குராவான பாலய்யா உடைத்தது அவரின் காஸ்ட்லி ஐபோனைத் தான்!

தன்னைப்பார்த்து "Reverse aging process ஆகுது உங்களுக்கு!" என யாரேனும் சொன்னால் Curious case of Benjamin button பட ஹீரோ போல குழந்தையாகவே மாறி குதூகலிப்பார். 'விக்குகள் தன்னுடைய இளமை மீட்பர்' என உறுதியாக நம்புகிறார்.

இப்போதெல்லாம் வாக்கிங் போகும்போதும் விக் இல்லாமல் வெளியே கிளம்புவதில்லை. எங்காவது குடும்பத்தோடு ஓய்வைக் கழிக்க செஷல்ஸ் தீவு, நியூசிலாந்து என பறந்தால் ஷூட்டிங்கின் போது பறக்கும் அதே பிரத்யேக விக்குகளும் உடன் செல்லும். இப்படி விக்குக்கும் தனக்குமான உறவை சினிமா தாண்டியும் புதுப்பித்துக்கொண்டே இருப்பதை யாரேனும் கிண்டலடித்தால், "ஆமாம்... உனக்கென்னடா பிரச்னை...என் தலை என் உரிமை!" என எதிராளியிடம் விக்கு விநாயக்ராமாய் மாறி தலையில் கடம் வாசித்து விடுவார். பாலய்யாவிடம் இன்னொரு பிரத்யேக குணம் உண்டு. தமிழ்மொழியில் பேசுபவர்களிடம் அன்பொழுக பேசுவது. பிறந்தது சென்னை என்பதால் இயல்பாகவே மழலைத் தமிழில் , "நானும் தமிழ்க்காரன் தான். தமிழ்த் தண்ணி குடிச்சு வளர்ந்தவன் நானு!" என தமிழ் மேடைகளில் முழங்குகிறார்.

அவர் எம்.எல்.ஏ-வாக இருக்கும் அனந்தபுரத்தில் தமிழ் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியாற்றும்போதெல்லாம் 'அண்ணய்யா' என்றுதான் அழைப்பார். வீட்டுக்கு வரவழைத்து தலைவாழை இலையில் விருந்தளித்து அவர்களை உபசரிப்பார். அவர்களை வசீகரிக்க எம்.ஜி.ஆர் சிவாஜியோடு பழகிய நாட்களை விவரிக்க ஆரம்பித்து விடுவார். 'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி!', 'ஆண்டன் கொடுத்தான்' போன்ற பாடல்களை ஸ்டைலாய் பாடி நெளியவைப்பது அவர் முரட்டு ஹாபிக்களில் ஒன்று. ஆரம்பத்தில் பாலய்யாவே கூப்பிட்டு விருந்து கொடுக்கிறாரே என வியந்தவர்களே, "ஆத்தி... உலகமகா டார்ச்சர்யா இந்த ஆளு!" என பாலய்யாவின் போன் அழைப்பைப் பார்த்ததும் பதறியிருக்கிறார்கள்.

அந்த அளவுக்கு 'அளவுக்கு மிஞ்சி' அன்பையும் நஞ்சாக்கியிருக்கிறார் பாலய்யா. ஆக, கடந்த இரண்டு எபிசோடுகளில் அவரைப் பற்றி ஒரு விஷயத்தை புரிந்திருப்பீர்கள். "பாலய்யா லொடலொடவென பேசுவார்!" என்பதே அது. ஆமாம். சினிமாவில் எப்படியோ அப்படித்தான் நிஜத்திலும் பன்ச்களை அள்ளித் தெளிப்பார். அதை நேரில் கேட்க காது கோடி வேண்டும். "ஊரு மாறலாம், தின்ற ஃபுட்டு மாறலாம், படுக்கிற பெட்டு மாறலாம். ப்ளட் எதுக்கு மாறப்போது...  ப்ளட் டொனேட் செய்யிங்க!" -இது ரத்த தான முகாமில் அடித்த பன்ச்.

`ரிஸ்க்கா... எனக்கா..? உங்களுக்கு ஒரு கதை சொல்றேன் கேளுங்க. ஒருத்தன் தண்டவாளத்துல ரயிலை எதிர்த்து ஓடுறான். எதிர்ல வந்த டிரெயின் மோதி செத்துட்டான். இன்னொருத்தன் ரயிலுக்கு முன்னாடி ஓடினான். ரயில் மோதி செத்துட்டான். இந்தக் கதையில டிரெயின் யார் தெரியுமா... நான்தான். ஒருத்தன் என்னை எதிர்த்தா, அவனுக்குதான் ரிஸ்க். ஒருத்தனை நான் எதிர்த்தாலும் அவனுக்குதான் ரிஸ்க்!"

- இது வாக்கு சேகரிப்பின்போது எதிர்க்கட்சியினரைப் பார்த்து சவால் விட்டு அடித்த கொடூர பன்ச். "இங்கே இருக்குற வோட்டர் ஒவ்வொருத்தனும் ஷூட்டர் டா!" - இதுவும் தன் இந்துப்பூர் தொகுதி மக்களிடம் சொன்ன பன்ச்.

"Don't trouble the trouble. If you trouble the trouble, trouble troubles you."- இந்த பாப்புலர் சினிமா பன்ச்சை எழுதியதே பாலய்யா தான். இப்படி சவுண்டு பார்ட்டியாக ஆன் ஸ்க்ரீன்- ஆஃப் ஸ்க்ரீன் இரண்டிலும் கலக்கிவரும் பாலய்யா பற்றி ஒரு ரகசியம் சொல்லவா..? சின்ன வயதில் அவருக்கு stammering பிரச்னை இருந்திருக்கிறது. 'என்னது திக்குவாயா..?' என ஆச்சர்யப்பட வேண்டாம். அதைவிட பெரிய பிரச்னை ஒன்றையே சின்ன வயதில் அசால்ட்டாக கடந்து வந்தவர் பாலய்யா. அந்த பெரிய பிரச்னை என்ன தெரியுமா..?

(தொடரும்...)

பாலய்யா வஸ்தாவய்யா 4 : `ஆட்டமு தேரோட்டமு' - பிறந்த நாளுக்குக் குவிந்த கூட்டம்; சாட்டை எடுத்த பாலய்யா

ஒரு 'பாலய்யாஜோக்' ஆந்திரா பக்கம் காலேஜ் அளவில் பாப்புலர்.*"ஒருவேளை பாலய்யா இப்ப பிறக்காம 150 வருஷத்துக்கு முன்னாடி பிறந்திருந்தா என்ன ஆகியிருக்கும்?"**"இந்திய சுதந்திரத்துக்காக வெள்ளைக்காரங்க நம்மக்கி... மேலும் பார்க்க

Allu Arjun: 1600 கி.மீ சைக்கிள் பயணம்; அல்லு அர்ஜுனைக் காண வந்த உ.பி ரசிகர்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன்.இவரது நடிப்பில் வெளியான 'புஷ்பா’ படம் ஹிட் ஆனதைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படம் டிசம்பர் 6 ஆம் தேதி... மேலும் பார்க்க

பாலய்யா வஸ்தாவய்யா 2: `சூரியனுக்கு முன் உணவு' -MGR பெரியப்பா, சிவாஜி சித்தப்பா - சென்னையில் விருந்து

வணக்கம் மக்களே... 'பாலய்யா வஸ்தாவய்யா' தொடருக்குக் கலவையான கமென்ட்டுகளும் ரகளையான ரியாக்‌ஷன்களுமாய் திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள்.பலர், "செம சூப்பரு...ஃபுல் ஸ்கேனிங் ரிப்போர்ட் கொடு தல!" என்று வாழ்த... மேலும் பார்க்க

Devara Review: பக்கா ஆந்திரா மீல்ஸ் உந்தி சார்... கானி காரம், சால்ட் மாத்ரம் லேது சார்!

செங்கடல் என்றொரு கடல். அதன் அருகில் நான்கு மலை கிராமங்கள் இருக்கின்றன.அந்த நான்கு கிராமங்களுக்கு ஒவ்வொரு தலைவர்கள். தேவரா (ஜூனியர் என்.டி.ஆர்), பைரா (சயீஃப் அலி கான்), குஞ்சாரா - கோரா (கலையரசன், சைன் ... மேலும் பார்க்க