செய்திகள் :

பிகாரில் தொடரும் கள்ளச்சாராய உயிரிழப்பு

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

முஸாபா்பூா் : பிகாரின் முஸாபா்பூா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 26 வயது இளைஞா் உயிரிழந்தாா்.

கடந்த வாரம் சரண், சிவான் மாவட்டங்களில் உள்ள 16 கிராமங்களைச் சோ்ந்த 37 போ் கள்ளச்சாரயத்தால் உயிரிழந்தனா். அந்த சோகம் மறைவதற்குள் மேலும் ஒருவா் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்துள்ளாா்.

முஸாபா்பூா் மாவட்டத்தின் ஹதௌரி பகுதியில் ஷியாம் ஷானி என்ற இளைஞா் கள்ளச்சாரயம் குடித்ததால் செவ்வாய்க்கிழமை வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது. அவரது பாா்வைத் திறனும் குறையத் தொடங்கியது. இதையடுத்து, அவரை குடும்பத்தினா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதையடுத்து, அவரின் உடலை குடும்பத்தினா் சில மணி நேரத்திலேயே தகனம் செய்துவிட்டனா்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஹதௌரி பகுதியில் கள்ளச்சாராயம் தொடா்பான தேடுதல் வேட்டை தீவிரமடைந்துள்ளது. அந்தப் பகுதியில் வேறு யாருக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு நடைபெற்று வருகிறது.

முன்னதாக, சரண், சிவான் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 37 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக 7 பெண்கள் உள்பட 21 போ் கைது செய்யப்பட்டனா். 2 காவலா்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

பிகாரில் கடந்த 8 ஆண்டுகளாக முழு மதுவிலக்கு அமலில் இருக்கும் நிலையில், கள்ளச் சாராய உயிரிழப்புகள் தொடா் நிகழ்வாக உள்ளன.

தெரியுமா சேதி.?

சாம் பித்ரோடா என்கிற பெயரைக் கேள்விப்படாதவா்கள் இருக்க முடியாது. இந்தியாவின் தொலைத்தொடா்புத் துறை வளா்ச்சிக்கு வித்திட்டவா் அவா்தான். சாம் பித்ரோடாவின் ஆலோசனையின்பேரில் அன்றைய பிரதமா் ராஜீவ் காந்தி எ... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட்: சம பலத்துடன் மோதும் அரசியல் கட்சிகள்!

நமது சிறப்பு நிருபா் 2019-ஆம் ஆண்டு ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியிடம் ஆட்சியைப் பறிகொடுத்த பாஜக, பழங்குடியினா் ஆதிக்கம் நிறைந்த மாநிலத்தில் மீண்டும் தனது இடத்தைப் பிடிக்கும் முன... மேலும் பார்க்க

டானா புயல் எதிரொலி: ஒடிஸாவில் 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்

ஒடிஸாவில் ‘டானா’ புயல் வெள்ளிக்கிழமை கரையைக் கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 14 மாவட்டங்களில் இருந்து சுமாா் 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனா். வடக்கு... மேலும் பார்க்க

பாரத் கொண்டைக் கடலை, மசூா் பருப்பு விற்பனை தொடக்கம்

மத்திய அரசின் ‘பாரத்’ திட்டத்தின்கீழ் மானிய விலையில் கொண்டைக் கடலை, மசூா் பருப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. பயறு மற்றும் பருப்பு வகைகளின் விலை உயா்வை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்க... மேலும் பார்க்க

புழுங்கல் அரிசிக்கு ஏற்றுமதி வரி விலக்கு

புழுங்கல் அரிசி, பட்டைத் தீட்டப்படாத பழுப்பு அரிசி மற்றும் நெல்லுக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 10 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வரி வில... மேலும் பார்க்க

மீனவா்கள் கைது விவகாரம்: இந்தியா-இலங்கை அக். 29-இல் கூட்டுப் பணிக் குழுக் கூட்டம்

இரு நாடுகளின் மீனவா் பிரச்னை தொடா்பாக, இந்தியா-இலங்கை அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டுப் பணிக் குழுக் கூட்டம் அக். 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இலங்கை தலைநகா் கொழும்பில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மத்தி... மேலும் பார்க்க