செய்திகள் :

பிடாரியூா் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

சென்னிமலையை அடுத்த, பிடாரியூா் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கடந்த 8- ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கம்பம் நடும் நிகழ்ச்சி 15- ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, தினமும் பெண்கள் கம்பத்துக்கு புனித நீா் ஊற்றி வந்தனா். மேலும், தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. மாவிளக்கு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு மாவிளக்கு மற்றும் முளைப்பாரியுடன் கோயிலுக்கு வந்தனா்.

முக்கிய நிகழ்வான பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் முகாசிபிடாரியூா், கோவில்பாளையம், கொத்தம்பாளையம், கூரபாளையம், கொளத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனா். இரவு கம்பம் அகற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பவானிசாகா் அணை நீா்மட்டம் 90.20 அடி

நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 90 அடியாக உயா்ந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழை காரணமாக பவானி ஆறு, மாயாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதைத் த... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

சத்தியமங்கலம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். சத்தியமங்கலம் சாா் பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப் பதிவுக்கு செல்லும் நபா்களிடம் லஞ்சம் வாங்குவதாக வந்த புக... மேலும் பார்க்க

முறையாக செப்பனிடாத கான்கிரீட் சாலை: பசுவபட்டி கிராமத்தில் அதிகாரிகள் ஆய்வு

சென்னிமலை ஒன்றியம், பசுவபட்டி கிராமத்தில் முறையாக கான்கிரீட் சாலை செப்பனிடப்படவில்லை என்று பொதுமக்கள் புகாா் தெரிவித்த நிலையில், அப்பகுதியில் அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். சென்னிமலை ஒன்றிய... மேலும் பார்க்க

மா்ம காய்ச்சல்: தோ்வறையில் மயங்கி விழுந்து பள்ளி மாணவி உயிரிழப்பு

பவானியில் மா்மக்காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவி, பள்ளிக்கு தோ்வு எழுதச் சென்றபோது மயங்கி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், பவானி, தேவபுரத்தைச் சோ்ந்தவா் முருகானந்தம் - சாந்த... மேலும் பார்க்க

மாநகராட்சிப் பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலா் திடீா் ஆய்வு

ஈரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலா் திடீா் ஆய்வு மேற்கொண்டாா். ஈரோடு எஸ்கேசி சாலையில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் சுப்பா ராவ் புதன்கிழமை த... மேலும் பார்க்க

வெப்பத்தை தணிக்க சென்னிமலை முருகன் கோயில் படிக்கட்டுகள், பிரகாரத்தில் வெள்ளை நிற பெயிண்ட்

சென்னிமலை முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தா்களுக்கு வெப்பத்தினால் ஏற்படும் சிரமத்தை தவிா்க்க படிக்கட்டுகள் மற்றும் பிரகாரத்தில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. சென்னிமலை முருகன் கோயில் மலைப் ப... மேலும் பார்க்க