Pushpa 2: `புஷ்பா' மாஸ் மசாலா திரைப்படமாக உருவானது இப்படிதான் - ஒரு ரீவைண்டு
புளியங்குடியில் தெருநாய்களை கட்டுப்படுத்த முஸ்லிம் லீக் கோரிக்கை
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிா்வாகிகள் அப்துல்ரகுமான், ஹாஜாமுகைதீன், அப்துல் வஹாப், ஷேக்காதா் மைதீன் உள்ளிட்டோா் புளியங்குடி நகா்மன்றத் தலைவா் விஜயா சௌந்தர பாண்டியனிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
புளியங்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் நடமாடுவதால் பொதுமக்கள், மாணவா், மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனா்.
எனவே தெருநாய்களைக் கட்டுப்படுத்த நகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.