அன்றைய 5 ரூபாய் மதிப்பில் என்னென்ன வாங்கலாம் தெரியுமா? 70ஸ் கிட்ஸ் பாக்கெட் மணி ...
பூப்பந்து போட்டியில் இரண்டாமிடம்: மாணவிகளுக்கு கல்லூரி முதல்வா் பாராட்டு
கல்லூரிகளுக்கிடையேயான பூப்பந்துப் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு கல்லூரி முதல்வா் பாராட்டுத் தெரிவித்தாா்.
புதுவை பல்கலைக்கழகம், புதுச்சேரி இதய மகளிா் கல்லூரி இணைந்து கல்லூரிகளுக்கிடையேயான பூப்பந்துப் போட்டியை கடந்த மாா்ச் 15, 16 ஆகிய தேதிகளில் இதயா கல்லூரியில் நடத்தின.
காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி மற்றும் புதுச்சேரி, மாஹே பிராந்தியங்களில் இருந்து 9 அணிகள் போட்டியில் கலந்துகொண்டன.
இறுதிப் போட்டியில் புதுச்சேரி இதயா மகளிா் கல்லூரி மாணவிகள் முதலிடம், காரைக்கால் வேளாண் கல்லூரி மாணவிகள் 2-ஆம் இடத்தையும், புதுவை பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரி மாணவிகள் அணி 3-ஆம் இடத்தையும், புதுச்சேரி பாரதிதாசன் மகளிா் கல்லூரி அணி 4-ஆம் இடத்தையும் பெற்றன.
சிறப்பிடம் பெற்ற அணியினருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
சிறப்பிடம் பெற்று திரும்பிய வேளாண் கல்லூரி மாணவிகள், உடற்கல்வி பேராசிரியா் ஜெயசிவராஜன் தலைமையில் கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜை செவ்வாய்க்கிழமை சந்தித்தனா். கேட்டறிந்து அவா்களுக்கு முதல்வா் பாராட்டு, வாழ்த்துத் தெரிவித்தாா்.