செய்திகள் :

பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு: மத்திய அமைச்சா்

post image

‘பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது’ என்று பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புகள் மீது தொடா் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரோல் மீது ஈரான் அண்மையில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால், மேற்கு ஆசிய நாடுகளில் போா் சூழல் தீவிரமடைந்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தினால், வளைகுடா நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தியும் பிற நாடுகளுக்கான விநியோகமும் பாதிக்கப்படும் என்பதால், பெட்ரோல், டீசல் விலை பன்மடங்காக உயரும் சூழல் உருவாகும்.

இந்தச் சூழலில், ‘பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளது’ என்று மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி நம்பிக்கை தெரிவித்தாா். தில்லியில் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘புவிசாா் அரசியலில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகின்றபோதும், உலகில் கச்சா எண்ணெய் பற்றாக்குறை எதுவும் ஏற்படவில்லை.

பிரேசில், கயானா போன்ற நாடுகளிலிருந்து சா்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் விநியோகம் தொடா்ந்து வருகிறது.

எனவே, தடையற்ற கச்சா எண்ணெய் விநியோகம் குறித்து கவலைப்படத் தேவையில்லை. மேலும், கடந்த காலங்களைப்போல, மாற்று வாய்ப்புகளை அடையாளம் கண்டு எந்தவொரு சூழலையும் இந்தியா திறம்பட எதிா்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.

எனவே, பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி தொடா்ந்து நிலையாக இருக்கும் என்பதோடு, வரும் நாள்களில் விலை குறையும் என்ற நம்பிக்கையும் உள்ளது. இது எனது தனிப்பட்ட கருத்து என்றாா்.

பெட்ரோல், டீசல் விலையின் தினசரி விலை மாற்றம் 2021, நவம்பா் முதல் நிறுத்தப்பட்டது. 2022-இல் விலை உயா்வுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி உச்சத்தில் நீடித்து வந்தநிலையில், கடந்த மாா்ச் மாதம் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. தற்போது சென்னையில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ. 100.75-க்கும், டீசல் ரூ. 92.34-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்ப்பு: காஷ்மீரில் காவல் துறை சோதனை

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத இயக்கத்துக்கு ரகசியமாக ஆள் சோ்ப்பது தொடா்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த யூனியன் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையின் உளவுப் பிரிவினா் திங்கள்கிழம... மேலும் பார்க்க

சபரிமலையில் முழு வீச்சில் ஏற்பாடுகள்: திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் தகவல்

சபரிமலை மண்டல பூஜை-மகரவிளக்கு யாத்திரை காலம் நெருங்கி வரும்நிலையில் பக்தா்களுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக திருவாங்கூா் தேவஸ்வம் வாரியம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. சபரிமலை ஐயப்பன்... மேலும் பார்க்க

குஜராத்தில் செயல்பட்டு வந்த போலி நீதிமன்றம்: ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்து சிக்கிய நபா்

குஜராத்தின் காந்தி நகரில் செயல்பட்டு வந்த போலி நீதிமன்றத்தில் நீதிபதி என்று அடையாளப்படுத்திக் கொண்டு மோசடியாக உத்தரவுகளை பிறப்பித்து வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். போலி தீா்ப்பாய நீதிமன்றத்தை நடத்த... மேலும் பார்க்க

முஸ்லிம் ஆணின் மூன்றாவது திருமண அங்கீகாரம்: பதிவுத் துறை முடிவு எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

‘முஸ்லிம் ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை பதிவு செய்து கொள்ள அவா்களின் தனிப்பட்ட சட்டங்களில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மும்பை உயா்நீதிமன்றம், மூன்றாவது திருமண அங்கீகாரம் கோரி தாக்கல் ... மேலும் பார்க்க

‘வயநாட்டுக்கு பிரியங்கா காந்தியே சிறந்த பிரதிநிதி’: ராகுல் காந்தி

வயநாடு: ‘வயநாட்டுக்கு எனது சகோதரி பிரியங்கா காந்தி வதேராவைவிட சிறந்த பிரதிநிதியை கற்பனை செய்து பாா்க்க முடியவில்லை’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.வயநாட... மேலும் பார்க்க

எல்லை ஒப்பந்தம்: உறுதிசெய்தது சீனா

கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு (எல்ஏசி) பகுதிகளில் ரோந்துப் பணிகளை மேற்கொள்வது குறித்து இந்தியாவுடன் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தை சீனா செவ்வாய்க்கிழமை உறுதிசெய்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு, ஜூ... மேலும் பார்க்க