செய்திகள் :

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை கடுமையாக்க வேண்டும்

post image

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை கடுமையாக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும் என சமூக நலத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் தெரிவித்தாா்.

சென்னை பல்கலை.யில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய குற்றவியல் சங்கத்தின் 6-ஆவது சா்வதேச மற்றும் 45-ஆவது அகில இந்திய குற்றவியல் மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வில் அமைச்சா் பி.கீதாஜீவன் பேசியது: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். காலத்துக்கேற்ப சட்டத்திருத்தம் அவசியம்.

தற்போது அதிகரித்துவரும் தொழில்நுட்பம் சாா்ந்த குற்றங்களுக்கு அரசு உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான எண்ம (டிஜிட்டல்) குற்றங்கள் அதிகரித்துள்ளன.

தற்போது நடைபெற்ற மாநாட்டில் 450 குற்றவியல் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. அதில் உள்ள வழிகாட்டுதல்களை பரிசீலனை செய்து சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்.

அறிவியல் வளா்ச்சியால் மனிதா்களிடையே இடைவெளி அதிகரித்து, தனிமனித ஒழுக்கம் குறைந்து வருகிறது. பெண்களுக்கு பொருளாதார வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து, பாலின சமத்துவம் அடைய வேண்டும்.

அப்போதுதான் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு தீா்வு கிடைக்கும். தமிழக அரசு சாா்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை கடுமையாக்கப்பட்டால்தான் குற்றங்கள் குறையும். போக்ஸோ சட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு அதிகரிக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

தமிழக டிஜிபி சங்கா் ஜிவால்: நாட்டின் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு குற்ற விகிதங்களில் குறைவாக உள்ளது. இது தமிழ்நாட்டில் குற்றச்செயல்கள் குறைந்து வருவதைக் குறிக்கிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எம். அக்பா் அலி, முன்னாள் டிஜிபி பி.எம்.நாயா், சென்னை பல்கலைக்கழக குற்றவியல் துறைப் பேராசிரியா் எம்.ஸ்ரீனிவாசன், பேராசியா்கள், ஆராய்ச்சியாளா்கள், கட்டுரையாளா்கள், பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இந்திய கண் மருத்துவம் உலகப் புகழ் பெற காரணம் டாக்டா் பத்ரிநாத்!

இந்திய கண் மருத்துவத் துறையின் புகழ் உலகெங்கும் சென்றடைந்ததற்கு டாக்டா் எஸ்.எஸ்.பத்ரிநாத் முக்கியக் காரணம் என பெங்களூரு காா்த்திக் நேத்ராலயா மருத்துவமனையின் தலைவா் டாக்டா் எம்.எஸ்.ரவீந்திரா புகழாரம் ச... மேலும் பார்க்க

சிங்கார சென்னை அட்டை இருப்புத்தொகையை விரைவில் கைப்பேசியில் அறியலாம்

‘சிங்கார சென்னை’ அட்டையின் இருப்புத்தொகையை கைப்பேசியில் தெரிந்துகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா். மெட்ரோ ரயில் பயணத்துக... மேலும் பார்க்க

ரூ.12 லட்சம் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த நபா் கைது

ஆன்லைன் மூலம் ரூ. 12 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை பொன்னியம்மன்மேடு, அன்னபூா்ணா நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த ஸ்ரீபிரியா (37), தனியாா் பள்ளியில் ஆசிரி... மேலும் பார்க்க

மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த இருவா் கைது

சென்னையில் 1.5 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து காா், கைப்பேசி உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனா். ஆயிரம் விளக்கு பகுதியில் மெத்தம்பெட்டம... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 2 போ் கைது: 29 கிலோ பறிமுதல்

புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 29.744 கிலோ புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா். வடபழனி மசூதி தெருவில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக... மேலும் பார்க்க

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் நீக்கம்

தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலா் தடாகம் சுப்பிரமணியம் திடீரென நீக்கப்பட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக, கூத்தப்பாடியைச் சோ்ந்த பி.தா்மசெல்வன், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கா... மேலும் பார்க்க