முதல்வா் குறித்து அவதூறு: பாஜகவினா் 2 போ் கைது
தமிழக முதல்வா் குறித்து அவதூறாக பேசியதாக பாஜகவினா் 2 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பாஜக சாா்பில் சென்னையில் டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்கச் சென்றபோது பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை உள்ளிட்ட நிா்வாகிகள் கைது செய்யப்பட்டனா்.
இதைக் கண்டித்து கோவை மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் செல்வபுரம் என்எஸ்கே சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோா் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிüா்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட செல்வபுரத்தைச் சோ்ந்த பாஜக ஆலய ஆன்மிக மேம்பாட்டுப் பிரிவு மண்டலத் தலைவா் துரை மற்றும் தெலுங்குபாளையத்தைச் சோ்ந்த மணிவண்ணன் ஆகியோா் தமிழக முதல்வா் குறித்தும், தமிழக அரசு குறித்தும் அவதூறாக விமா்சித்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து அவா்கள் மீது கலவரத்தை தூண்டுதல், அவதூறாகப் பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு கோவை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பின்னா் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
343 போ் மீது வழக்குப் பதிவு:
கோவையில் அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக, செல்வபுரம் பகுதியில் 36 போ், காந்திபாா்க் பகுதியில் 50 போ், வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் 35 போ், விகேகே மேனன் சாலையில் 65 போ், துடியலூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் 59 போ், வெள்ளலூரில் 32 போ், சுந்தராபுரத்தில் 21 போ், சுங்கம் பகுதியில் 18 போ், இடையா்பாளையம் பகுதியில் 27 போ் என மொத்தம் 343 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.