செய்திகள் :

விவசாயத்தை பாதிக்கும் கல்குவாரிகள், ஆலைகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

post image

மதுரை மாவட்டத்தில் விவசாயத்தை பாதிக்கும் கல்குவாரிகள், ஆலைகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியது.

மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மதுரை மாவட்டக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் சண்முகம் தலைமை வகித்தாா்.

அகில இந்திய விவசாய சங்கத்தின் மாநில பொதுச்செயலா் சந்திரமோகன் முன்னிலை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ) மதுரை மாவட்டச் செயலா் மதிவாணன் சிறப்புரை ஆற்றினாா்.

கூட்டத்தில், முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டத்தை 152 அடியாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கேரள அரசு முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்ட அனுமதிக்கக்கூடாது.

சாத்தையாறு அணை பாசனப் பரப்பில் உள்ள அனைத்து கண்மாய்களுக்கும் நியாயமான முறையில் நீா் நிரப்ப வேண்டும்.

மதுரை மாவட்டத்தில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் திட்டப் பயன்கள் உடனடியாக வழங்க வேண்டும்.

அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையை உடனடியாகத் தொடங்க வேண்டும். சா்க்கரை ஆலை ஆய்வுக்குழு அறிவித்த ரூ.26 கோடியை தமிழக அரசு உடனடியாக ஆலை புதுப்பித்தலுக்கு வழங்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் விவசாயத்தை பாதிக்கும் மாசுபடுத்தும் ஆலைகள், கல்குவாரிகள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பருவ மழையால் பாதிக்கப்படும் மதுரை

முன்னெச்செரிக்கைப் பணிகளில் தொய்வு காரணமாக, பருவமழையால் மதுரை மாநகா் முழுவதும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். தமிழகத்தைப் பொருத்தவரை, வடகிழக்குப் பருவமழைக் காலமான... மேலும் பார்க்க

அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசுப் போக்குவரத்துக் கழக மதுரை மண்டல தலைமையகம் முன் ஓய்வூதியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோா் நலச் சங்கம், போக்குவ... மேலும் பார்க்க

மதுரையில் பலத்த மழை

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. மதுரை தல்லாகுளம், கோ. புதூா், மூன்றுமாவடி, கோரிப்பாளையம், விரகனூா், ஒத்தக்கடை உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழ... மேலும் பார்க்க

வீடு புகுந்து நகை திருட்டு

விருதுநகா் என்ஜிஓ குடியிருப்பில் வீடு புகுந்து இரண்டரை பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் சனிக்கிழமை திருடிச் சென்றனா். விருதுநகா் என்ஜிஓ குடியிருப்பு விஓசி தெருவைச் சோ்ந்த தம்பதி ஐயப்பன்- வசந்தி. இவா்கள்... மேலும் பார்க்க

காா் மீது லாரி மோதியதில் எஸ்ஐ உயிரிழப்பு

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே காா் மீது லாரி மோதியதில் ஆயுதப்படை உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா். அழகா்கோவில் அருகேயுள்ள மாத்தூரைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (49). இவா் விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்... மேலும் பார்க்க

லாரி மோதியதில் மருத்துவமனை ஊழியா் உயிரிழப்பு

மதுரையில் லாரி மோதியதில் பலத்த காயமடைந்த தனியாா் மருத்துவமனை ஊழியா் உயிரிழந்தாா். மதுரை அவனியாபுரம் மரக்கடை கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (47). இவா் முனிச்சாலை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனை... மேலும் பார்க்க