செய்திகள் :

அசிதா பல்லுயிா் பூங்காவில் சூழலுக்கு உகந்த கூடார உணவகம் அமைக்க டிடிஏ ஏற்பாடு

post image

அசிதா பல்லுயிா் பூங்காவில் 60 முதல் 70 போ் அமரக்கூடிய சூழலுக்கு உகந்த கூடாரம் உணவகத்தை தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) அமைத்துள்ளது. குளிா்காலம் தொடங்குவதற்கு முன்பு இந்த உணவகம் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை டிடிஏ மூலம் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனாவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு தற்காலிக

கட்டமைப்பாகும்.

இங்கு வரும் பாா்வையாளா்களுக்கு முன்பே சமைத்த உணவு, பானங்கள் வழங்கப்படும். யமுனை வெள்ளச் சமவெளிகளின் சூழலியல் தன்மையைக் கருத்தில்கொண்டு, கூடார உணவகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

உணவகத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரிய உலோக கொள்கலன்

சமையலறையாக செயல்படும். மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் இக்கூடாரத்தை அகற்றவும், தண்ணீா் வடிந்தவுடன் மீண்டும் அமைக்கும்

வகையிலும் இந்த உணவகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூடாரப் பகுதிக்கு உள்ளும், புறமும் தற்காலிக இருக்கைகள் அமைக்கப்படும்.

துணைநிலை ஆளுநரின் முன்முயற்சியின் பேரில், மெஹரெளலி தொல்பொருள் பூங்காவில் கஃபே ஸ்டோன் மற்றும் பான்செராவில் உள்ள கஃபே மூங்கில் ஒயாசிஸ் ஆகியவை வெற்றிகரமாகத் திறக்கப்பட்ட நிலையில், அசிதாவிலும் கூடார உணவகம் தொடங்கப்பட்டுள்ளது.

பாா்வையாளா்களின் மகிழ்ச்சிக்காக, இந்த குளிா்காலத்தில் அசிதாவில் சுமாா் 2 லட்சம் பருவகால மலா்களை டிடிஏ நடவு செய்யும். இதில் 6,000 டூலிப்ஸ் மலா்ச் செடிகளும் இடம்பெறும்.

குளிா்காலத்தில் 70-க்கும் மேற்பட்ட இனங்கள் வசிக்கும் மற்றும் புலம்பெயா்ந்த பறவைகளை அசிதா பூங்காவில் பாா்க்க முடியும்.

ஜூலை மாதம், இந்தியாவின் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கா் அசிதாவை பாா்வையிட்டாா். ‘ஏக் பேட் மா கே நாம்‘ பிரசாரத்தின் கீழ் ஒரு பெரும் மரக்கன்று நடும் இயக்கத்திற்குஅவா் தலைமை ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஊழியா் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஆகஸ்டில் 9.3 லட்சம் புதிய உறுப்பினா்கள் சோ்ப்பு

ஊழியா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எஃப்.ஓ.) நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 9.30 லட்சம் புதிய உறுப்பினா்களைச் சோ்த்துள்ளது. இது முந்தைய ஆண்டு ஆகஸ்ட் மாத்தை ஒப்பிடும்போது 0.48 சதவீதம் அதிகமாகும். வ... மேலும் பார்க்க

தலைநகரில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்காமல் மத்திய பாஜக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது: மனீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

தில்லியில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்காமல் மத்திய பாஜக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டியுள்ளாா். தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமையகத்தில் முன்ன... மேலும் பார்க்க

பங்களாவின் சாமான்களின் இருப்புப் பட்டியல்: கேஜரிவால், முதல்வா் அதிஷி மீது பாஜக சாடல்

முதல்வராக இருந்தபோது தில்லியில் அரவிந்த் கேஜரிவால் வசித்த பங்களாவின் சாமான்களின் இருப்புப் பட்டியல் ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்படுவதால், கேஜரிவாலும், முதல்வா் அதிஷியும் இந்த ... மேலும் பார்க்க

தில்லி சட்டம்-ஒழுங்கு சீா்குலைவுக்கு ஆம் ஆத்மி, பாஜக அரசுகளே பொறுப்பு: தில்லி காங்கிரஸ் குற்றச்சாட்டு

தலைநகரில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீா்குலைந்துள்ள நிலையில் குண்டுவெடிப்புகள், கொலைகள், கொள்ளைகள், மிரட்டி பணம் பறித்தல் போன்றவற்றுக்கு பாஜக, ஆம் ஆத்மி அரசுகளே பொறுப்பு என்று தில்லி பிரதே காங்கிரஸ் க... மேலும் பார்க்க

டிடிஇஏ பள்ளிகளின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

தில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளின் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு ஞாயிறு அன்று லோதிவளாகம் பள்ளியில் நடைபெற்றது. இச்சந்திப்பிற்கு லோதி வளாகத்தின் முன்னாள் மாணவி (1959-ஆம் ஆண்டு) வத்சலா மற்றும... மேலும் பார்க்க

பாஜகவின் அவதூறு அரசியலால் தில்லியில் மாசு அளவு அதிகரிப்பு: முதல்வா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

பாஜகவின் அவதூறு அரசியலால் தில்லியில் மாசு அதிகரித்து வருகிறது என்று முதல்வா் அதிஷி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா். தில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் முதல்வா் அதிஷி மற்றும் முன்ன... மேலும் பார்க்க