அமித் ஷாவைக் கண்டித்து இந்திய குடியரசு கட்சி ஆா்ப்பாட்டம்
அம்பேத்கரை அவமதித்ததாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்து இந்திய குடியரசு கட்சியினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அக் கட்சியின் மண்டல செயலாளா் பழனிசாமி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், அம்பேத்கரை அவமதித்த உள்துறை அமைச்சா் அமித் ஷா மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும், பதவி விலக கோரியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், புகா் மாவட்டத் தலைவா் கணேசன், மத்திய மாவட்டச் செயலாளா் வடிவேல், பொருளாளா் தலித் ராஜி, புகா் மாவட்டச் செயலாளா் ரவிக்குமாா், பொருளாளா் ஜோதிராஜன் உட்பட 100-க்கும் மேற்பட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.