செய்திகள் :

அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்: விவசாய சங்கத் தலைவர் கைது!

post image

அரசுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ள விவசாய சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிகாய்ட் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்.

விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தில்லியை நோக்கி நூற்றுக்கணக்கான விவசாயிகள் திங்கள்கிழமை பேரணியாக புறப்பட்டனா். பாரதிய கிசான் யூனியன், பாரதிய கிசான் பரிஷத், சம்யுக்த கிசான் மோா்ச்சா, கிசான் மஸ்தூா் மோா்ச்சா அமைப்புகள் சாா்பாக இந்தப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தங்கள் போராட்டத்தை புதன்கிழமை தீவிரப்படுத்த பாரதிய கிசான் யூனியன் முடிவு செய்தது. இதனிடையே, கிரேட்டர் நொய்டாவில் விவசாயிகள் சங்க தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் இன்று(டிச. 4) பங்கேற்க சென்ற பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிகாய்ட், அலிகார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலர் கைது செய்யப்பட்டு டப்பால் காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

விவசாயிகளை எத்தனை காலம் சிறைப்பிடித்து வைக்க அரசு நிர்வாகத்தால் இயலும் என்றும் கேள்வி எழுப்பியுள்ள ராகேஷ் டிகாய்ட், இத்தகைய நடவடிக்கைகளை அதிகாரிகள் கையிலெடுத்தால், விவசாயிகளின் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றும் எச்சரித்துள்ளார்.

கடந்த 1997-ஆம் ஆண்டுமுதல் உத்தரப் பிரதேசத்தில் தங்களிடம் இருந்து அரசு கையகப்படுத்திய நிலங்களுக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,கிரேட்டர் நொய்டாவின் ஸீரோ பாய்ண்ட் பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இன்று(டிச. 4) திரண்டு அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

பாஸ்போர்ட் சேவை மையங்களை 600ஆக அதிகரிக்கப்படும்!

புதுதில்லி: தபால் நிலையங்கள் மூலம் செயல்படும் பாஸ்போர்ட் சேவா கேந்திரங்களின் எண்ணிக்கையை, அடுத்த ஐந்து ஆண்டுகளில், தற்போதுள்ள 442-ல் இருந்து 600 ஆக உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.அஞ்சலகங்கள் மூ... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பை ஆயுதமாக்க வேண்டாம்: தேவேந்திர ஃபட்னவீஸ்

மகாராஷ்டிரத்தில் கடந்த ஆண்டு மட்டும் 90% அந்நிய நேரடி முதலீடு கிடைத்துள்ளதாக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார். மேலும், சாதிவாரி கணக்கெடுப்பை ஆயுதமாக்க வேண்டாம் எ... மேலும் பார்க்க

ஃபட்னாவீஸின் வெற்றிக்கான ரகசியம் என்ன..? மனைவி கூறியவை!

மகாராஷ்டிர முதல்வராக பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸின் வெற்றி குறித்து அவரது மனைவி அம்ருதா ஃபட்னாவீஸ் பகிர்ந்துள்ளார்.மகாராஷ்டிர முதல்வராக பாஜக மூத்த தலைவா் தேவேந்திர ஃபட்னவீஸ் புதன்கிழமை ஒருமனத... மேலும் பார்க்க

கொல்கத்தா மருத்துவர் பாலியல் கொலை: முகநூலில் நீதி கேட்கும் பெற்றோர்!

கொல்கத்தா மருத்துவமனையில் பாலியல் கொலை செய்யப்பட்ட முதுநிலை பயிற்சி மருத்துவரின் பெற்றோர், நீதி வேண்டி முகநூல் பக்கத்தில் இன்று (டிச. 5) புதிய கணக்கைத் தொடங்கியுள்ளனர். கொல்கத்தாவில் மருத்துவர்கள் தொட... மேலும் பார்க்க

புஷ்பா 2: நெரிசலில் சிக்கி பெண் பலி; அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு!

அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 திரைப்படத்தை பார்க்க திரையரங்குக்குச் சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பரிதாபமாக பலியானார். இதனால், அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 4 ஆம... மேலும் பார்க்க

டிச. 7-ல் அஸ்ஸாம் அமைச்சரவை விரிவாக்கம்!

அஸ்ஸாம் அமைச்சரவையில் டிச. 7ஆம் தேதி புதிதாக 4 அமைச்சர்கள் பொறுப்பேற்கவுள்ளதாக மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை உறுப்பினர்களான பிரசாந்த பூகன், கெளசிக் ராய், கிருஷ்னேன்டு... மேலும் பார்க்க