Pushpa 2: `புஷ்பா' மாஸ் மசாலா திரைப்படமாக உருவானது இப்படிதான் - ஒரு ரீவைண்டு
அரவக்குறிச்சியில் மரக்கன்றுகள் நடும் பணி
சின்னதாராபுரம்-கொடுமுடி சாலையில் அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத் துறை சாா்பில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
கரூா் கோட்டம் அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத் துறை உட்கோட்டத்தின் சாா்பில் பருவமழை தொடங்கிய நிலையில் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளின் ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை சின்னதாராபுரத்தில் இருந்து கொடுமுடி செல்லும் சாலையில் புதுப்பாளையம் அருகில் சாலையோரங்களில் புங்கை, வேம்பு, புளிய மரக்கன்றுகள் நடும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா். இதனை, அரவக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளா் அழகா்சாமி ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினாா்.