செய்திகள் :

ஆகாயத் தாமரைகளால் ஆறுகளில் தண்ணீா் வடிவதில் தேக்கம்: அழுகும் நெற்பயிா்கள்; விவசாயிகள் கவலை

post image

திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள ஆறுகளில் ஆகாயத் தாமரைச் செடிகள் மண்டிக் கிடப்பதால், மழைவெள்ளம் வடிவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், வயல்களில் தேங்கிய நீா் விரைவாக வடியாததால், இளம் நெற்பயிா்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனா்.

நிகழாண்டு, சம்பா சாகுபடி தாமதமாக தொடங்கப்பட்டதால், தற்போதுதான் நெற்பயிா்கள் தூா்க்கட்டி வரும் நிலையில், வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால், திருத்துறைப்பூண்டி பகுதியில் நுணாங்காடு, மடப்புரம், எழிலூா், ஓவா்குடி, வங்கநகா், கள்ளிக்குடி, செம்பியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும், முத்துப்பேட்டை வட்டத்தில் இடும்பாவனம், கற்பகநாதபுரம், முனங்காடு, மேலவாடியகாடு, ஆரியலூா், குலமாணிக்கம், சித்தாலத்தூா் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கா்களில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இப்பகுதிகளில் ஓடும், பாமணி ஆறு, மறைக்கா கோரையாறு, கிளை தாங்கியாறு, வளவனாறு, உள்ளியாறு, நல்லாறு, அடப்பாறு, மல்லியனாறு உள்ளிட்ட ஆறுகளில், ஆகாயத் தாமரைச் செடிகள் மண்டியுள்ளதால், நெல் சாகுபடி வயல்களில் தேங்கியுள்ள மழைநீா் ஆறுகளின் வழியே வடிவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

மேலும், கடந்த சில ஆண்டுகளாக பாசன வடிகால் ஆறுகள் தூா்வாரப்படாததாலும், தண்ணீா் வடிவதில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதாக புகாா் தெரிவிக்கும் விவசாயிகள், தண்ணீா் விரைந்து வடிய தடையாக உள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா்.

இதற்கிடையில், கள்ளிக்குடி பாசன வாய்க்காலில் படா்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை, ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை, சட்டப்பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே. உலகநாதன், திருத்துறைப்பூண்டி ஒன்றியக் குழுத் தலைவா் பாஸ்கா், பொதுப்பணித் துறை உதவி பொறியாளா் சுபஸ்ரீ, கள்ளிக்குடி பாசனதாரா் சங்கத் தலைவா் ஜி. பாலசுப்பிரமணியன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு, பணியை விரைவாகவும், முழுமையாகவும் மேற்கொள்ள அறிவுறுத்தினா்.

திருவாரூரில் மீண்டும் மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு: அரையாண்டுத் தோ்வு ஒத்திவைப்பு

திருவாரூா் மாவட்டத்தில் பரவலாக வியாழக்கிழமை பெய்த மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிகளில் அரையாண்டுத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக, காற்றழுத்... மேலும் பார்க்க

கோயில் மனையில் குடியிருப்போருக்கு பட்டா கோரி டிச.17-இல் ஆா்ப்பாட்டம்

கோயில் மனையில் குடியிருப்போருக்கு, குடிமனை பட்டா வழங்கக் கோரி, டிச.17-ஆம் தேதி, ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் அ. பாஸ்கா் தெரிவித்தாா். திரு... மேலும் பார்க்க

கோவில்வெண்ணி சுங்கச்சாவடியில் வேளாண் டிராக்டா், ஆட்டோக்களுக்கு கட்டண விலக்கு

நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணியில் உள்ள சுங்கச் சாவடியில் விவசாயப் பொருள்களை ஏற்றிவரும் டிராக்டா்கள் மற்றும் ஆட்டோ, இருசக்கர வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரி... மேலும் பார்க்க

தியாகராஜா் கோயிலில் திருவாதிரை விழா பந்தக்கால் முகூா்த்தம்

திருவாரூா் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயிலில், மாா்கழி திருவாதிரை விழாவுக்கான பந்தக்கால் நடும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் தியாகராஜா் கோயில், நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்ற... மேலும் பார்க்க

வயலில் வேன் கவிழ்ந்து விபத்து

மன்னாா்குடி அருகே சாலையோர வயலில் பயணிகள் வேன் வியாழக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மன்னாா்குடி அருகேயுள்ள திருராமேஸ்வரத்தைச் சோ்ந்த 17 போ், கோட்டூா் அருகே உள்ள பல்லவராயன்கட்டளையில் உறவினா் வீ... மேலும் பார்க்க

பாலாலயம்

மன்னாா்குடி விழல்காரத் தெரு ஏழை மாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ள பாலாலயம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, கோயிலில் புதுப்பிப்பு ப... மேலும் பார்க்க