செய்திகள் :

``நான் யாரு தெரியுமா? என் அப்பா கலெக்டர் பி.ஏ!'' - மது போதையில் தகராறு; சம்பவம் செய்த கடலூர் எஸ்.பி

post image

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் இருந்து மதுபான கடத்தலை தடுப்பதற்காக, நேற்று கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது `போலீஸ்’ என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் ஒன்று புதுச்சேரியில் இருந்து கடலூரை நோக்கி கட்டுப்பாடின்றி வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் இருந்தவர்கள் மது போதையில் இருந்தது தெரிய வந்தது.

போலீஸாரிடம் வாக்குவாதம் செய்த போதை நபர்கள்

அதையடுத்து காரை ஓட்டி வந்த நபரை அழைத்த எஸ்.பி ஜெயக்குமார், `காரில் ஏன் போலீஸ் என்று ஓட்டி வைத்திருக்கிறாய்?’ என்றார்.

அதற்கு அவர் என் மனைவி போலீஸாக இருக்கிறார் என்று சொன்ன அவரிடம், `உன் மனைவி போலீஸாக இருந்தால், நீ எப்படி காரில் போலீஸ் என்று ஒட்ட முடியும் ? கவர்ன்மெண்ட் வண்டியா இது ?’ என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

அத்துடன் காரில் ஒட்டப்பட்டிருந்த `போலீஸ்’ ஸ்டிக்கரையும் அகற்றுவதற்கு உத்தரவிட்டார். தொடர்ந்து காரை ஒட்டி வந்த அந்த நபர், `காரில் அமர்ந்திருப்பவர் கவர்ன்மெண்ட் ஸ்டாஃப்’ என்றார்.

அப்போது, `யாராக இருந்தால் என்ன… நாங்களும் கவர்ன்மெண்ட் ஸ்டாஃப்தான்’ என்று எஸ்.பி ஜெயக்குமார் பேசிக் கொண்டிருக்கும்போதே, காரில் இருந்து இறங்கிய போதை நபர் ஒருவர், `ஏய் நான் யார் தெரியுமா… கலெக்டர் பி.ஏ… என் அப்பா கலெக்டர் பி.ஏ…’ என்று போலீஸாருடன் வாக்குவாதம் செய்தார்.

அதையடுத்து அங்கிருந்த போலீஸார் அந்த போதை நபரை காரில் அமர வைத்தனர். ஆனால் அப்போதும் போதை தலைக்கேறிய நிலையில் அவர் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.

ஜெயக்குமார் - எஸ்.பி.
ஜெயக்குமார் - எஸ்.பி.

அதில் டென்ஷனான எஸ்.பி ஜெயக்குமார், காரில் இருந்த நபரை இறக்கி கைது செய்ய உத்தரவிட்டார். அதையடுத்து அந்த நபரை கைது செய்த போலீஸார், நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு, `குடி போதையில் தப்பா பேசிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க’ என்று போலீஸாரிடம் அழுது புலம்பினார் அந்த போதை நபர்.

இந்த சம்பவம் குறித்து எஸ்.பி ஜெயக்குமாரிடம் கேட்டபோது, ``பண்டிகைக் காலங்களில் கொண்டாட்டங்கள் இருப்பது தவறில்லை. ஆனால் அது மற்றவர்களை பாதிக்கக் கூடாது. இவர்களின் கொண்டாட்டங்களுக்காக பொதுமக்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது,'' என்றார்.

Louvre Museum: `விலைமதிப்பற்ற' நெப்போலியன் நகைகள் திருட்டு; உச்ச பாதுகாப்பை தாண்டி எப்படி நடந்தது?

உலகிலேயே மதிப்புமிக்க வரலாற்றுக் கலைப்பொருட்கள் இருக்கும் அருங்காட்சியகம் பாரிஸில் உள்ள லூவர். மோனா லிசா போன்ற அதீத முக்கியத்துவம் கொண்ட பொருட்கள் இங்கு உயர் தொழில்நுட்ப கண்காணிப்பில் உள்ளன. இங்கிருந்... மேலும் பார்க்க

`ஆன்லைனில் மது ஆர்டர்' - ரூ. 7 லட்சத்தை இழந்த சினிமா நிறுவனம்; சைபர் கிரைம் மோசடி

இப்போதெல்லாம் எந்தப் பொருளை வாங்குவதாக இருந்தாலும் அதை ஆன்லைனில் வாங்குவது அதிகரித்து இருக்கிறது. ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்யும் போது, சைபர் கிரிமினல்களால் பலர் தங்களது பணத்தை இழந்து விடுகின்றனர்... மேலும் பார்க்க

சீனா டு தூத்துக்குடி; துறைமுகத்தில் சிக்கிய ரூ.5 கோடி மதிப்பிலான சீன `பைப்' பட்டாசுகள் -விவரம் என்ன?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகள் கடத்தி விற்கப்படுகிறதா என, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையி... மேலும் பார்க்க

மும்பை: 72 வயது தொழிலதிபர் டிஜிட்டல் கைது; 6500 வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்ட ரூ.58 கோடி!

மும்பையை சேர்ந்த 72 வயது பங்குச்சந்தை வியாபாரியை சைபர் கிரிமினல்கள் தங்களை அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ அதிகாரிகள் என்று கூறி டிஜிட்டல் முறையில் கைது செய்து ரூ.52 கோடியை வாங்கிக்கொண்டனர். முதியவர் ... மேலும் பார்க்க

ராஜபாளையம்: கனமழையால் இடிந்து விழுந்த சுவர்; 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இளந்திரை கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மையப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர்களது குடும்பம் மூன்று தலைமுறைகளாக ஆடு மேய்க்கும் தொழிலைச் செய்து வருகிறது.... மேலும் பார்க்க

``குறைந்த விலைக்கு பட்டாசு; ஆன்லைன் விளம்பரம் நம்பி ஏமாறாதீர்’’ - எச்சரிக்கும் காவல்துறை!

வரும் 20-ம் தேதி, தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொது மக்கள் பலரும் புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நேரத்தைப் பயன்படுத்தி, ஆன்லைன் மூலமாக குறைந்த விலைக்க... மேலும் பார்க்க