செய்திகள் :

``ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்தால் கூடுதல் வரி விதிப்போம்" - மீண்டும் முருங்க மரம் ஏறும் ட்ரம்ப்

post image

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தும் முயற்சியில் அதிபர் ட்ரம்ப் ரஷ்யா மீது சிலப் பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, ரஷ்யாவிடமிருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெய் வியாபார லாபம்தான் உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்துவதற்கு பெரும் துணையாக இருக்கிறது எனக் கூறிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ``ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கு நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்" என மறைமுகமாக இந்தியாவை எச்சரித்தார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

ஆனால், இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கிவருகிறது. எனவே, கடந்த மாதம் இந்தியப் பொருள்களுக்கு 50 சதவிகிதம் வரியும், 25 சதவிகிதம் அபராதமும் விதித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

இதனால் இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து காசா - இஸ்ரேல் போர் விவகாரத்தில் அமெரிக்க அதிபரின் செயல்பாடுகளை பிரதமர் மோடி பாராட்டினார். அதைத் தொடர்ந்து இரு நாட்டின் தலைவர்களும் தங்கள் நட்பைப் புதுப்பித்துக்கொண்டனர்.

இதற்கிடையில், பிரதமர் மோடியுடன் தொலை பேசியில் பேசியதாகக் கூறிய அதிபர் ட்ரம்ப், ``இந்தியவுடன் பேசியிருக்கிறேன். இந்தியா தனது ரஷ்ய எண்ணெய் கொள்முதலை நிறுத்தும் என்று பிரதமர் மோடி எனக்கு உறுதியளித்திருக்கிறார்" என்றார்.

ஆனால், இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் அந்தக் கூற்றை நிராகரித்து, ``அன்று தலைவர்களுக்கு இடையேயான எந்த தொலைபேசி உரையாடலும் நடந்ததாக எங்களுக்குத் தெரியவில்லை.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர், 'இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை பாதியாகக் குறைத்துள்ளதாகக் கூறினார்.

அப்படி எதுவும் இந்தியா குறைக்கவில்லை' எனக் கூறியது. இந்த நிலையிதான் அதிபர் ட்ரம்ப் ,`` இந்தியா தனது விதிமுறைகளுக்கு ஒப்புக்கொண்டு அதன் கொள்முதலை நிறுத்தாவிட்டால் இந்தியப் பொருட்களுக்கு கூடுதல் வரிகளை விதிப்பேம்" என பகிரங்கமாக மீண்டும் மிரட்டியிருக்கிறார்.

திண்டுக்கல்: விற்பனைக்கு வந்த பலவகை பூக்கள்; நிலக்கோட்டையில் குவியும் மக்கள்!

நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில்நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில்நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில்நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில்நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில்நிலக்கோட்டையில் பூ மார்க்கெட்டில்நி... மேலும் பார்க்க

Vijay-அ க்ளோஸாக வாட்ச் பண்ணும் Amit shah, Stalin-க்கு 10 சோதனைகள்? | Elangovan Explains

தைலாபுரம் ரூட் எடுக்கும் திமுக. பனையூருக்கு ரூட் போடும் பாஜக. பாமகவை சுற்றி பட்டாசு. ராமதாசை வைத்து ஸ்டாலின் போடும் கணக்கு. அன்புமணியிடம் பாஜக போட்ட டீல். இன்னொரு பக்கம், விஜயை க்ளோசாக வாட்ச் பண்ணும் ... மேலும் பார்க்க

Trump: 'No Kings' ட்ரம்பிற்கு எதிராக வெடித்த மக்கள் போராட்டம்; பின்னணி என்ன?

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பான கொள்கைகளை எதிர்த்து அமெரிக்காவின் பல்வேறு நகரங்கள் மற்றும் லண்டன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரு... மேலும் பார்க்க

நீதிமன்றம் குறித்து அவதூறு பேச்சு; சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு யூடியூப் சேனல் ஒன்றுக்கு சீமான... மேலும் பார்க்க