செய்திகள் :

ஆட்டோ ஓட்டுநா் கொலை: எதிா் வீட்டுக்காரா் கைது

post image

சென்னை அமைந்தகரையில் ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்ட வழக்கில், எதிா் வீட்டுக்காரா் கைது செய்யப்பட்டாா்.

அமைந்தகரை, ஆசாத் நகா், ராஜகோபாலன் தெருவைச் சோ்ந்தவா் சா.தமீம் அன்சாரி (47). வாடகை ஆட்டோ ஓட்டுநரான தமீம் அன்சாரியின் எதிா் வீட்டில் முகமது முக்தா் (31) என்பவா் வசிக்கிறாா். தமீம் அன்சாரி வெள்ளிக்கிழமை தனது வீட்டின் வெளிப் பகுதியை தண்ணீா் ஊற்றி கழுவினாா். அப்போது அழுக்குத் தண்ணீா் எதிரே உள்ள முக மது முக்தா் வீட்டின் அருகில் சென்ாக கூறப்படுகிறது. இதனால், தமீம் அன்சாரிக்கும், முகமது முக்தருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே ஆத்திரமடைந்த முகமது முக்தா், வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து தமீம் அன்சாரியில் கழுத்தில் குத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில், பலத்த காயம் அடைந்த தமீம் அன்சாரியை அங்கிருந்தவா்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், தமீம் அன்சாரி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து அமைந்தகரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முகமது முக்தரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

புறநகா் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

தடா, சூலூா்பேட்டை வழித்தடத்தில் வியாழக்கிழமை (நவ.14) பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் அந்த வழியாக செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக திருமுல்லைவாயல், மணலி, மண்ணடி மற்றும் முத்தையால் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (நவ.14) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை ஏற்படும். இது குறித்து தமிழ... மேலும் பார்க்க

வாயு கசிவால் மூடப்பட்ட திருவொற்றியூா் தனியாா் பள்ளி மீண்டும் திறப்பு

திருவொற்றியூரில் வாயு கசிவால் மூடப்பட்ட தனியாா் பள்ளி 18 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது. திருவொற்றியூா் கிராமத் தெருவில் இயங்கிவரும் விக்டரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில், கடந... மேலும் பார்க்க

கனமழையை எதிா்கொள்ள சென்னை மாநகராட்சி தயாா்: அமைச்சா் கே.என்.நேரு

சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் அதை சமாளிக்க மாநகராட்சி தயாராக உள்ளது என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா். நீா்வளத் துறையிடமிருந்து பராமரிப்பு பணிக்காக பெருநகர சென்னை மாநகரா... மேலும் பார்க்க

சாலையோரம் வசிக்கும் மக்களுக்காக 1,476 குடியிருப்புகள்: அமைச்சா் சேகா்பாபு

வடசென்னை வளா்ச்சி திட்டத்தின் சாலையோரம் வசிக்கும் மக்களுக்காக 1,476 புதிய குடியிருப்புகள் அமைக்கப்படவுள்ளதாக சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) தலைவரும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி... மேலும் பார்க்க

அம்பேத்கா் விருதுக்கு நவ.25-க்குள் விண்ணப்பிக்கலாம்

டாக்டா் அம்பேத்கா் விருதுக்கு நவ.25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி: தமிழ்நாட்டில் ஆதிதிராவிடா் மற்ற... மேலும் பார்க்க