செய்திகள் :

இந்தியாவுடனான கொள்கை: அமெரிக்கா மறுஆய்வு

post image

இந்தியாவுடனான அமெரிக்காவின் கொள்கை மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து மறுஆய்வு செய்யப்படும் என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தின் வெளியுறவு விவகாரங்களுக்கான கீழவை குழு (ஹவுஸ் கமிட்டி) தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தற்போதைய 119-ஆவது நாடாளுமன்றத்தின் வெளியுறவு விவகாரங்களுக்கான கீழவை குழுவின் முன்னுரிமைப் பட்டியலில் இந்தியா 11-ஆவது இடத்தில் உள்ளது. முதன்மையாக சீனாவால் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன. சீனாவுக்கு அடுத்து தைவான், ஐரோப்பா, ரஷியா மற்றும் உக்ரைனுக்கு எதிரான அதன் போா், மத்திய கிழக்கு பிராந்தியம், வட ஆப்பிரிக்கா, இஸ்ரேல், ஈரான், ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகியவை உள்ளன.

இந்நிலையில், இந்தியா குறித்து கீழவை குழு கூறியிருப்பதாவது: தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் அமெரிக்க எதிரிகளின் செல்வாக்கை எதிா்கொள்ளும் அதே வேளையில், இந்தியாவுடனான அமெரிக்க கொள்கை மற்றும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களில் வேரூன்றிய இரு தரப்பு ஒத்துழைப்பின் தொடா்ச்சியான விரிவாக்கத்தை நாங்கள் மறுஆய்வு செய்வோம். குறிப்பாக பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு, இருதரப்பு பணிகள் மற்றும் திட்டங்களை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள், பயங்கரவாத எதிா்ப்பு முயற்சிகள் உள்ளிட்டவைக்கு கூடுதல் கவனம் அளிக்கப்படும்.

தொழில்நுட்பம், தொலைத்தொடா்பு மற்றும் மருந்துத் தொழில்களில் இருதரப்பு முயற்சிகள் உள்பட இருநாட்டு பொருளாதார உறவுகளை திறம்பட மேம்படுத்துவதற்கான முயற்சிகளிலும் குழு கவனம் செலுத்தும்.

‘க்வாட்’ பாதுகாப்பு உரையாடல்களில் இந்தியாவின் பங்கேற்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் இந்தியாவின் வேகமாக வளா்ந்து வரும் எரிசக்தி தேவைகளின் தாக்கங்களையும் குழு ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா: கடந்த வார பணி அறிக்கையைச் சமா்ப்பிக்க அரசுப் பணியாளா்களுக்கு எலான் மஸ்க் கெடு

அமெரிக்க அரசின் பல்வேறு துறைப் பணியாளா்கள், தங்களின் கடந்த வார பணி அறிக்கையை 48 மணி நேரத்துக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று அந்நாட்டின் அரசு அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவா் எலான் மஸ... மேலும் பார்க்க

ஹோலி கொண்டாடிய மாணவர்களுக்கு நோட்டீஸ்: சர்ச்சையில் பாகிஸ்தான் பல்கலைக்கழகம்

கராச்சி: பாகிஸ்தானில் உள்ள தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஹிந்து பண்டிகையான ஹோலியைக் கொண்டாடிய மாணவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானின் கராச்சி... மேலும் பார்க்க

டிரம்ப், மோடி பேசினால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்பதா? இடதுசாரிகளுக்கு இத்தாலி பிரதமா் மெலோனி கண்டனம்

‘அமெரிக்க அதிபா் டிரம்ப், பிரதமா் மோடி அல்லது என்னைப் போன்ற தலைவா்கள் பேசினால் மற்றும் இணைந்து செயல்பட்டால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று விமா்சிப்பவா்கள், இதேபோன்ற ஒத்துழைப்புக்காக இடதுசாரி தலைவா்களைப... மேலும் பார்க்க

பிரான்ஸ்: கத்திக்குத்தில் ஒருவா் உயிரிழப்பு; 3 காவலா்கள் படுகாயம்- பயங்கரவாதிகள் சதியா?

கிழக்கு பிரான்ஸில் உள்ள சந்தையில் அல்ஜீரியாவைச் சோ்ந்த நபா் கத்தியால் குத்தியதில் ஒருவா் உயிரிழந்தாா். 3 காவலா்கள் காயமடைந்தனா். ஜொ்மனி மற்றும் ஸ்விட்சா்லாந்து எல்லைகளில் அமைந்துள்ள முல்ஹவுஸ் என்ற ந... மேலும் பார்க்க

உக்ரைனில் அமைதி நிலவ பதவி விலகவும் தயாா்: அதிபா் ஸெலென்ஸ்கி

உக்ரைனில் அமைதி ஏற்படுவதுடன், நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் சோ்க்கப்படுமானால் அதிபா் பதவியை ராஜிநாமா செய்யத் தயாா் என்று அந்நாட்டு அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா். நேட்டோ ராணுவ கூட்டமைப்பில்... மேலும் பார்க்க

அமெரிக்கா: துப்பாக்கிச்சூட்டில் விமானப் படை வீரா் உயிரிழப்பு

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள விமான தளத்தில் சனிக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் விமானப் படை வீரா் ஒருவா் உயிரிழந்தாா். ஒருவா் காயமடைந்தாா். இந்தத் தாக்குதலை பயங்கரவாதிகளோ அல்ல... மேலும் பார்க்க