செய்திகள் :

"இர்ஃபான் செயல் கண்டிக்கத்தக்கது; புகார் அளித்துள்ளோம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

post image

`யூடியூபர் இர்ஃபானின் செயல் மன்னிக்கக் கூடியது அல்ல’ என்று பேசியுள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

குழந்தை பிறந்தபோது, பிரசவ அறைக்குச் சென்று குழந்தையின் தொப்புள்கொடியை வெட்டியிருக்கும் இர்ஃபான், அதனை வீடியோவாகவும் எடுத்து அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.

இர்ஃபான்

முன்னதாக குழந்தையின் பாலினத்தை துபாய் சென்று அறிந்துகொண்ட இர்ஃபான், எந்தக் குழந்தை எனத் தெரிவிக்கும் வீடியோவை யூடியூபில் வெளியிட்டது சர்ச்சையானது. தொடர்ந்து இதுபோன்ற சர்ச்சைகளில் இர்ஃபான் சிக்குவது பேச்சுபொருளாகியிருக்கும் நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இதுகுறித்துப் பேசியுள்ளார்.

மதுரையில் இராஜாஜி அரசு மருத்துவமனையில் ரூ 9.90 கோடி மதிப்பீட்டில் புதிய Cath lab மற்றும் மருத்துவ உபகரணங்கள், உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பொது சுகாதார ஆய்வகம் ஆகியவை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர், அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.

அப்போது இர்ஃபான் குறித்த கேள்வி கேட்கப்பட்டபோது, "கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்துகொள்ளக் கூடாது என சட்டம் இருக்கும் நிலையில், கடந்த வருடம் துபாய் சென்று அதைத் தெரிந்துகொண்டுவிட்டார். தகவல் தெரிந்த உடனேயே அவர் மீது நடவடிக்கை எடுக்க நோட்டிஸ் அனுப்பினோம். பின்னர் அவர் அதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டார்.

இந்த நிலையில் தற்போது அவருடைய குழந்தைக்கு அவரே தொப்புள் கொடியை அறுத்திருக்கிறார். இது கண்டிக்கத்தக்க செயல்.

மதுரையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

அறுவை சிகிச்சை நடக்கும் அறைக்குள் மருத்துவர் அல்லாத ஒருவர் சென்று, தொப்புள் கொடியை துண்டித்திருப்பதென்பது National Medical Commission Act 2021, பிரிவு 34, செக்ஷன் 1,2-ஐ மீறுவதாகும்.

மருத்துவச் சட்ட விதிகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நோட்டிஸ் கொடுக்கப்பட்டுள்ளது. செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் அவர் மீது நடவடிக்கை எடுக்க டி.எம்.எஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அவர் மட்டுமல்லாமல் அவரை மருத்துவமனைக்குள் அனுமதித்த பெண் மருத்துவர் நிவேதிதா, ரெயின்போ தனியார் மருத்துவமனை மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நிவேதிதா மருத்துவ பயிற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என மருத்துவ கவுன்சிலில்லும் நோட்டிஸ் அளித்திருக்கிறோம். சட்ட ரீதியாகவும் துறை ரீதியாகவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இர்ஃபான் குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொண்டது துபாயில் அல்லாமல் நம் ஊரில் நடந்திருந்தால் சம்மந்தப்பட்ட நிறுவனத்தை மூடியிருப்போம்." என்று பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88

Gujarat: 5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி, வழக்குகளுக்கு தீர்ப்பு சொல்லிய நபர் கைது!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வழக்குகளை தீர்த்து வைக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ மத்தியஸ்தர் என்று போலியாக நீதிமன்றம் நடத்திவந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மோரிஸ் சாமுவேல் கிறிஸ்ட... மேலும் பார்க்க

சுமங்கலி விரதம் முடித்து, கணவனை விஷம் வைத்து கொன்ற மனைவி... என்ன நடந்தது?

வட இந்தியாவில் கணவன் நீண்ட நாள் உயிரோடு இருக்கவேண்டும் என்பதற்காக பெண்கள் கர்வா செளத் எனப்படும் ஒரு வித பண்டிகையை கொண்டாடுவர். அன்றைய தினம் பெண்கள் விரதம் இருந்து நிலவு வெளிச்சத்தில் கணவன் முகத்தை பார... மேலும் பார்க்க

Lawrence Bishnoi: "பிஷ்னோய்யை என்கவுன்ட்டர் செய்யும் போலீஸுக்கு சன்மானம்" - கர்மி சேனா சொல்வதென்ன?

மகாராஷ்டிராவில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வரும் டெல்லி மாஃபியா கும்பல் தலைவர் லாரன்ஸ் பிஷ்னோய் குஜராத் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை மத்திய அரசு தன... மேலும் பார்க்க

கோவை கார் வெடிப்பு சம்பவம்: மேலும் 3 பேர் கைது... 17 ஆக உயர்ந்த மொத்த கைது; அதிர்ச்சி பின்னணி

கோவை, கோட்டை ஈஸ்வரர் கோயில் அருகே கடந்த 2022ம் ஆண்டு கார் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. அந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த ஜமேசா முபின் உயிரிழந்தார். இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது. இதன் பின்னணிய... மேலும் பார்க்க

கன்னியாகுமரி: போலியான அரசு முத்திரை, கையொப்பம், ரசீது - காவல்துறையை அதிரவைத்த கனிமவள கடத்தல் கும்பல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைகளை வெட்டிஎடுத்து கேரளாவுக்குக் கடத்தும்கனிம வள கடத்தல் பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அதிலும், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தினமும் நூற்றுக்கணக்கான லாரிக... மேலும் பார்க்க

ஹைதராபாத்: மதுபானக் கூடத்தில் ஆபாச நடனம்... பார்ட்டி - 40 இளம்பெண்கள் உட்பட 140 பேர் கைது!

ஹைதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள மதுபானக் கூடத்தில் ஆபாச நடனமாடிய பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 40 இளம்பெண்கள் உள்பட மதுபோதையில் திளைத்த 140 பேரை பஞ்சாரா ஹில்ஸ் போலீஸார் கைது செய்து, மதுபானக் க... மேலும் பார்க்க