மும்பையில் மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ-வான தமிழர்; தமிழ்செல்வத்திற்கு அமைச்சர் ...
உலக செஸ் சாம்பியன்ஷிப்: மீண்டும் டிராவில் முடிந்த 8ஆவது சுற்று..!
சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனும், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இந்திய வீரர் குகேஷும் விளையாடி வருகின்றனர்.
14 சுற்றுகளைக் கொண்ட இந்தத் தொடரில் முதலில் 7.5 புள்ளிகள் பெறும் நபர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
இந்தத் தொடரின் முதல் சுற்றில் டிங் லிரேனும் மூன்றாவது சுற்றில் குகேஷும் வெற்றி பெற்றனர். இரண்டாவது சுற்று டிராவில் முடிந்தது.
மேலும் 4,5,6,7-வது சுற்றுகளும் தொடர்ந்து டிராவிலேயே முடிந்தன.
இந்த நிலையில் நடைபெற்ற 8ஆவது சுற்றில் கறுப்பு நிற காய்களுடனும் லிரென் வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினார்கள்.
இருவருமே வெற்றி பெறும் வாய்ப்பினை தவறவிட்டார்கள். இறுதியில் 51ஆவது நகர்த்தலில் இருவரும் டிராவில் முடித்துக்கொண்டார்கள்.
4-4 என்ற புள்ளிகளுடன் இருவரும் சமநிலையில் இருக்கிறார்கள். மீதம் 6 போட்டிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.