செய்திகள் :

என் தந்தையின் கர்ஜனை எனக்குள் இருக்கிறது: பாபா சித்திக் மகன் பதிவு!

post image

பாபா சித்திக் கொல்லப்பட்டது தொடர்பாக அவரது மகன் எம்எல்ஏ ஸீஷான் சித்திக் எக்ஸ் தள்த்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான பாபா சித்திக் கூலிப் படையினரால் மும்பையின் பாந்த்ரா பகுதியில் அவருடைய அலுவலகம் அருகே கடந்த அக். 12 இரவு சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில், இதுவரை 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவரை சுட்ட முக்கியக் குற்றவாளி மற்றும் திட்டத்திற்கு உடந்தையாக இருந்த இருவரையும் தேடி வருகின்றனர்.

இதையும் படிக்க | சல்மான் கான் மீது கொலை முயற்சி: பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவருக்கு போலீஸ் காவல்

இந்த நிலையில், தனது தந்தையின் கொலை குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள மகாராஷ்டிரத்தின் வந்த்ரே தொகுதி எம்எல்ஏ ஸீஷான் சித்திக், ”அவர்கள் என் தந்தையை அமைதிப்படுத்தினார்கள். ஆனால், அவர் ஒரு சிங்கம் என்பதை மறந்துவிட்டனர். அவருடைய கர்ஜனை என்னுள்ளே இருக்கிறது. அவருடைய போராடும் குணம் என் நரம்புகளில் உள்ளது. அவர் நியாயத்துக்காகவும் மாற்றத்துக்காகவும் போராடினார். அதற்காக எதையும் எதிர்க்கத் தயாராக இருந்தார்.

அவரை வீழ்த்தியவர்கள் வெற்றி பெற்றதாகக் கருதி தற்போது என் மீது பார்வையை திருப்பியுள்ளனர். அவர்களுக்கு நான் தெரிவிப்பது இதுதான் : சிங்கத்தின் ரத்தம் என் நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. நான் இங்கே அச்சமின்றி இருக்கிறேன். அவர்கள் என் தந்தையை எடுத்துக் கொண்டனர். ஆனால், அந்த இடத்திலிருந்து நான் மேலே எழுவேன். இந்த சண்டை இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. இன்று, நான் என் தந்தை நின்ற இடத்தில் நிற்கிறேன். உயிருடன், எதற்கும் தயாராக, எதற்கும் அஞ்சாமல். என்னுடைய வந்த்ரே கிழக்கு பகுதி மக்களுக்கு துணையாக நான் எப்போதும் இருப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கொலைக்கான காரணம் பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக, லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இந்தக் கொலையில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

குஜராத்தில் 427 கிலோ அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

குஜராத்தில் 427 கிலோ மதிப்புள்ள சந்தேகத்திற்குரிய போதைப் பொருள்கள், ரூ. 14 லட்சம் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். குஜராத்தின் பரூச் மாவட்டத்திலுள்ள அங்கலேஷ்வர... மேலும் பார்க்க

தலித் இளைஞர் கொலை வழக்கு: ஆந்திர முன்னாள் அமைச்சரின் மகன் கைது!

தலித் இளைஞரின் கொலை வழக்கில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பினிேபே விஸ்வரூப்பின் மகன் பினிபே ஸ்ரீகாந்தை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளார்.டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனச... மேலும் பார்க்க

புது வகை ஆன்லைன் மோசடி! ரூ. 60 லட்சத்தை இழந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி! எப்படி நடந்தது?

உத்தர பிரதேசத்தில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி 'இணையவழி கைது' எனும் ஆன்லைன் மோசடியால் ரூ. 60 லட்சத்தை இழந்துள்ளார். 'டிஜிட்டல் அரெஸ்ட்' எனும் இணையவழி ஆன்லைன் பண மோசடி அதிகரித்து வருகிறது. இந்நிலையில் உத்... மேலும் பார்க்க

இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றால்தான் தேர்தலில் போட்டியிட முடியும்! சந்திரபாபு நாயுடு

இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றால்தான் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற வகையில் சட்டம் கொண்டு வரப் போவதாக ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.ஆந்திர மக்கள்தொகையில... மேலும் பார்க்க

மருத்துவர்களை இன்று சந்திக்கும் மமதா: உண்ணாவிரம் கைவிடப்படுமா?

கொல்கத்தாவில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் இளநிலை மருத்துவர்களை முதல்வர் மமதா பானர்ஜி திங்கள்கிழமை மாலை சந்திக்கிறார்.மாலை 5 மணிக்கு மாநிலச் செயலகத்தில் நடைபெறும் இந்த சந்திப்பின்போது உண்ணா... மேலும் பார்க்க

பிரியங்காவுக்காக வயநாடு தேர்தலில் சோனியா பிரசாரம்?

வயநாடு மக்களவைத் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில், முதல் முறையாக தேர்தல் களம் காணும் தனது மகள் பிரியங்காவுக்காக, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா, பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தகவலறிந்த ... மேலும் பார்க்க