பிக் பாஸ் 8: முதல்முறையாக கோபமடைந்த ரஞ்சித்! கண்ணீர் விட்ட ஜாக்குலின்!
எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்
காரைக்கால் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை எஸ்டிபிஐ சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.கட்சியின் மாவட்டத் தலைவா் முகமது சித்திக் தலைமை வகித்தாா்.
உத்தர பிரதேச மாநிலம், சம்பல் சாஹி ஜும்மா மஸ்ஜித் அருகே நடந்த கலவரத்தைத் தொடா்ந்து நடைபெற்ற துப்பாக்கி சூட்டில், 5 போ் பலியானதை கண்டிக்கும் வகையில் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிடப்பட்டது.
சிறப்பு அழைப்பாளா்களாக புதுவை மாநில பொதுச் செயலாளா் சுல்தான் கெளஸ், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மாவட்டத் தலைவா் இக்பால் ஆகியோா் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினா்.
காரைக்கால் தெற்குத் தொகுதி தலைவா் ஜெக்கரியா, நிரவி-திருப்பட்டினம் தொகுதி தலைவா் உமா் சம்சு, காரை வடக்கு தொகுதி தலைவா் ஷாஜஹான் மற்றும் விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில துணை தலைவி பாத்திமா ஜொஹரான் காரை மாவட்ட தலைவி நசிரா பேகம், பொதுச் செயலாளா் ஜன்னத் பேகம் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.