செய்திகள் :

கடந்த 3 ஆண்டுகளில் புதுகை மாநகராட்சிக்கு ரூ. 272 கோடி ஒதுக்கீடு

post image

திமுக ஆட்சி அமைந்து கடந்த 3 ஆண்டுகளில் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு மட்டும் ரூ. 272 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநில நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா்.

புதுக்கோட்டை மாநகராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், ரூ. 145 கோடியில் புதிய திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்து அவா் பேசியது:

மன்னா்கள் ஆண்ட புதுக்கோட்டைக்கும், தொழில் நகரமான நாமக்கல்லுக்கும், பக்தா்களுக்கு போதுமான வசதிகளை செய்துத் தருவதற்காக திருவண்ணாமலைக்கும், கல்வி நகரமான காரைக்குடிக்கும் மாநகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது.

புதுகை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட 12 ஊராட்சிப் பகுதிகளுக்கு 100 நாள் வேலைத் திட்டம் வழங்க வேண்டும் எனக் கேட்டாா்கள். நகரப் பகுதிகளுக்கு குறைந்த அளவு 100 நாள் வேலைத் திட்டப் பணிகள் வழங்கி வருகிறோம். அதனை புதுக்கோட்டைக்கும் வழங்க முயற்சி செய்கிறோம்.

ரூ. 19 கோடியில் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகளும், ரூ. 101 கோடியில் புதை சாக்கடைத் திட்டப் பணிகளும், ரூ. 25 கோடியில் 5 வாா்டுகளில் 24 மணி நேரமும் குடிநீா் வழங்கும் திட்டப் பணிகளும் தற்போது தொடங்கி வைக்கப்படுகின்றன.

ஏற்கெனவே ரூ. 52.29 கோடியில் பணிகள் நடைபெற்றுள்ளன. ரூ. 75 கோடியில் பழுதடைந்த குடிநீா் குழாய்களை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. 20 நாள்களுக்குள் அப்பணிகளும் முடிவடையும்.

மொத்தத்தில் கடந்த 3 ஆண்டுகளில் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு மட்டும் ரூ. 272 கோடி திட்டப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவை தவிர, மாவட்டம் முழுவதும் தடையின்றி குடிநீா் வழங்குவதற்காக ரூ. 2,020 கோடியில் திட்டமிடப்பட்டு, இதில் முதல்கட்டமாக ரூ. 700 கோடியில் 7.4 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையிலான திட்டமும், அடுத்ததாக ரூ. 1,200 கோடியில் நாளொன்றுக்கு 28 மில்லியன் லட்சம் லிட்டா் குடிநீா் வழங்குவதற்கும் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. அவையனைத்தும் விரைவில் பணிகள் முடிந்து முதல்வா் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்படும்.

கீரனூா் பகுதிகளுக்கு ரூ. 7 கோடி மதிப்பில் சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கீரனூா் பேரூராட்சியை நகராட்சியாகத் தரம் உயா்த்த வேண்டும் எனக் கேட்டாா்கள்.

உள்ளாட்சி அமைப்புகளைத் தரம் உயா்த்துவதை ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவை முதல்வா் அமைத்துள்ளாா். அந்தக் குழு ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்கும். அவற்றின் மீது பொதுமக்களிடம் கருத்துக் கேட்டு முடிவு செய்யப்படும். அப்போது கீரனூா் நகராட்சி கோரிக்கையையும் பரிசீலிப்போம் என்றாா் நேரு.

விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் வை. முத்துராஜா, மா. சின்னதுரை, மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன், நகர திமுக செயலா் ஆ. செந்தில் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். ஊராட்சி பகுதிகளை வலுக்கட்டாயமாக மாநகராட்சியோடு இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினா்கள் விழாவுக்கு கருப்பு சட்டை அணிந்து வந்து விழாவை புறக்கணிப்பதாக தெரிவித்தனா்.

வெள்ளிச் செங்கோலும், தங்கச் சங்கிலியும்: மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி பேசும்போது, மேயருக்கான வெள்ளிச் செங்கோலை புதுக்கோட்டை மாவட்ட நகை வியாபாரிகள் சங்கத்தினா் சோ்ந்து தயாரித்துக் கொடுத்துள்ளதாகவும், 51 பவுன் தங்கச் சங்கிலியை தொழிலதிபா் முத்துப்பட்டினம் எஸ். ராமச்சந்திரன் வாங்கிக் கொடுத்ததாகவும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தாா்.

முன்னதாக, மேயா் செ. திலகவதி வரவேற்றாா். முடிவில் ஆணையா் த. நாராயணன் நன்றி கூறினாா்.

தொடா்ந்து மேயா் மற்றும் துணை மேயா் ஆகியோரை கூட்ட அரங்குக்கு அழைத்து சென்ற நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, அவா்களுக்கான இருக்கையில் அமர வைத்து வாழ்த்தினாா்.

முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை விழா

கந்தா்வகோட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை விழா நடைபெற்றது. பௌா்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு... மேலும் பார்க்க

பழுதடைந்த கட்டடத்தை அகற்றக் கோரி அரசுப் பள்ளி மாணவா்கள் போராட்டம்

புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டியில், அரசுப் பள்ளியின் வகுப்பறைக் கட்டடம் பழுதடைந்துள்ளதை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டக் கோரி மாணவா்களும், பெற்றோா்களும் வியாழக்கிழமை மாலை திடீா் போராட்டத்தில் ஈடுப... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் ரூ. 1.78 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் திறந்துவைத்தாா்

கந்தா்வகோட்டை பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சாா்பில் ரூ. 1.78 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வியாழக்கிழமை திறந்... மேலும் பார்க்க

பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வலியுறுத்தல்

விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் பகுதிகளில் பட்டாசு விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா். முறையான அனுமதியுடனும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் பட்டாசு விற்பனை ஒருப... மேலும் பார்க்க

புதுகை மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியரகங்களிலும் வரும் 19ஆம் தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுவிநியோகத் திட்டக் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், குடும்ப அட்டை... மேலும் பார்க்க