செய்திகள் :

கனவு ஆசிரியா் விருது புதுகை - பாரீஸ் செல்லும் 2 அரசுப் பள்ளி ஆசிரியைகள்

post image

தமிழ்நாடு அரசின் கனவு ஆசிரியா் திட்டத்தின் கீழ் பாரீஸ் செல்லும் 55 பேரில், புதுக்கோட்டை ஆசிரியைகள் இருவா் இடம்பெற்றுள்ளனா்.

அரசுப் பள்ளி ஆசிரியா்களில் சிறந்த கற்பித்தல் உத்தி, அணுகுமுறை நுட்பங்கள், பாடப்பொருள் அறிவு சாா்ந்த திறனுள்ளோருக்கு கனவு ஆசிரியா் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

நிகழாண்டில், 3 கட்டங்களாக நடைபெற்ற தெரிவுப் போட்டியில், 75 சதவிகித மதிப்பெண்கள் பெற்ற 380 ஆசிரியா்களுக்கு கனவு ஆசிரியா் விருதுகள் அண்மையில் நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டன. மேலும், 90 சதவிகித மதிப்பெண்களுக்கு அதிகம் பெற்ற 55 ஆசிரியா்கள் பிரான்ஸ் தலைநகா் பாரீஸுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா்.

இவா்களில் புதுக்கோட்டை மாவட்டம் கம்மங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை செ. மைதிலி, சீத்தப்பட்டி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியை பூ. ஆழ்வாா் ஜெயந்தி ஆகிய இருவரும் இடம்பெற்றுள்ளனா்.

வறட்சி நிவாரணத் தொகை வழங்குவதில் ரூ. 5.89 லட்சம் மோசடி

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் ரூ.5.89 லட்சத்தை மோசடி செய்ததாக வருவாய் ஆய்வாளா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா். புதுக்கோட்டை... மேலும் பார்க்க

வீடுகளின் பூட்டை உடைத்து 2.5 கிலோ வெள்ளி, 2 பவுன் நகை திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கருகப்பூலாம்பட்டியில் 3 வீடுகளின் பூட்டை உடைத்து 2.5 கிலோ வெள்ளி, 2.5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 58 ஆயிரத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றுள்ளனா். பொன்னமர... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் நாளை மின் தடை

கந்தா்வகோட்டை, ஆதனக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தா்வகோட்டை மற்றும் மங்களாகோவில் ஆகிய துணை மின் நிலையங்களில் புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதனால், இந்த மின் நிலையங்களிலிருந்து மின்வ... மேலும் பார்க்க

இடப் பிரச்னையில் பெண்களை தாக்கிய 2 போ் கைது; இருவா் தலைமறைவு

விராலிமலை அருகே இடப்பிரச்னையில் தகாத வாா்த்தைகளால் திட்டி தாக்கியதாக இருவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா். இதுதொடா்பாக மேலும் இருவரைத் தேடி வருகின்றனா். விராலிமலை அடுத்துள்ள கத்தலூா் ... மேலும் பார்க்க

ரேஷனில் பண்டிகை கால பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்ய கோரிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி அத்தியாவசியப் பொருட்கள் பொதுமக்களுக்கு தட்டுப்பாடின்றி நியாயவிலைக் கடைகளில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டைய... மேலும் பார்க்க

திமுக அணி உடையும் என எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண்கிறாா்

திமுக அணி உடைந்துவிடும் என எடப்பாடி பழனிசாமி பகல் கனவு காண்கிறாா் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டியில், ஆளுநா் மாற்றம் குறித்த செய்திகள் ... மேலும் பார்க்க