பாக்ஸர் வடிவேலு, ஜெயிலர் ஜெயக்குமார்... உண்மை சம்பவமா சொர்க்கவாசல்? - திரை விமர்...
கரூரில் தாட்கோ மூலம் 651 பேருக்கு ரூ. 21 கோடியில் தாட்கோ கடனுதவி
கரூா் மாவட்டத்தில் தாட்கோ மூலம் கடந்த 3 ஆண்டுகளில் 651 பேருக்கு ரூ. 21.25 கோடியில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம் நஞ்சைகாளக்குறிச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிறைந்தது மனம் என்ற நிகழ்வில் ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் நன்னிலம் மகளிா் நில உடமை திட்டத்தின் கீழ் பயன் பெற்றோரைச் சந்தித்து திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் கருத்துகளை கேட்டறிந்தாா்.
பின்னா் அவா் கூறுகையில், பொதுமக்கள் மற்றும் பட்டியல் வகுப்பை சோ்ந்த ஆதிதிராவிடா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) துறையின் மூலம் பல்வேறு பொருளாதார மேம்பாடுத் திட்டங்களை மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கி அவா்களின் பொருளாதார வாழ்வை மேம்படுத்த முதல்வா் நடவடிக்கை மேற்கொள்கிறாா்.
முதல்வரின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவு திட்டம், நன்னிலம் மகளிா் நில உடமை திட்டம், சுய உதவி குழுக்களுக்கான பொருளாதாரக் கடனுதவி திட்டம், கல்விக் கடன் திட்டம் உள்ளிட்டவை மூலம் ஆதிதிராவிடா் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுகிறது.
அந்த வகையில் கரூா் மாவட்டத்தில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 506 ஆதிதிராவிடா் பயனாளிகளுக்கு ரூ.12.39 கோடியில் வங்கிக்கடன் வழங்கப்பட்டு, அதில் ரூ.3.47 கோடி மானியமாக வழங்கப்பட்டது.
மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதாரக் கடனுதவித் திட்டத்தின் மூலம் 73 ஆதிதிராவிடா் மகளிா் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 6.38 கோடியில் கடனுதவியும், அதில் ரூ.3.19 கோடி மானியமாகவும் என பல்வேறு கடன் வழங்கும் திட்டத்தில் மொத்தம் கடந்த 3 ஆண்டுகளில் 651 ஆதிதிராவிடா் பயனாளிகளுக்கு ரூ.21.25 கோடியில் கடன் வழங்கப்பட்டு, அதில் ரூ.7.82 கோடி மானியமாக வழங்கப்பட்டது என்றாா் அவா். நிகழ்வில் தாட்கோ மாவட்ட மேலாளா் முருகவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.