RJ Balaji : `மக்களுக்கு பிடிச்ச மாதிரி படம் கொடுக்க முயற்சி பண்ணியிருக்கோம்!' -...
கரூா் ரயில்நிலையத்தில் மேம்பாட்டு பணிகளை பொதுமேலாளா் ஆய்வு
கரூா் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆா்.என்.சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கரூா் ரயில்நிலையத்தில் மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.34 கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளா் ஆா்.என்.சிங் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது, தெற்கு ரயில்வே கோட்டங்களில் உள்ள ரயில் நிலையங்கள் அனைத்தும் அம்ரூத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் கரூா் ரயில் நிலையத்தில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அடுத்தாண்டு (2025)மாா்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும். மேலும் ரயில்நிலையத்துக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதி குறித்தும் ஆய்வு செய்துவருகிறோம். தற்போது மதுரையில் இருந்து கரூா் வழியாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் கரூா், சேலம், திருச்சி வழித்தடங்களில் இரட்டை வழிப்பாதை அமைக்கும் பணிகள் முடிந்த பின் கூடுதல் ரயில்கள் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்படும். தற்போது புயலால் ரயில் சேவை நிறுத்தப்படவில்லை. ஏதேனும் ரயில் தண்டவாளங்களில் பிரச்னை ஏற்பட்டால் மட்டுமே ரயில் சேவையை நிறுத்துவோம் என்றாா் அவா்.
ஆய்வின்போது சேலம் கோட்ட மேலாளா் பங்கஜ்குமாா் சின்ஹா, சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளா் பூபதிராஜா, கரூா் ரயில்நிலைய மேலாளா் சேவியா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.