செய்திகள் :

ஃபென்ஜால் புயல் எதிரொலி: திரையரங்குகள், நகைக்கடைகள் மூடல்!

post image

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் சனிக்கிழமை (நவ. 30) இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை காலை(டிச.1) புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை மற்றும் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அண்ணா பல்கலை.யில் பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

அதன் தொடர்ச்சியாக, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திரையரங்குகளும் இன்று (நவ.30) இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து நகைக்கடைகளும் மூடப்படும் என்று நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி அறிவித்துள்ளார். கனமழையால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி இருப்பதாலும், நகைக்கடைகளுக்கு வருவதில் சிக்கல் ஏற்படும் என்பதாலும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மழை பாதிப்பு இருக்கக்கூடிய மாவட்டங்களில் உள்ள மொத்தம் 7000 நகைக்கடைகள் இன்று மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இயல்பைவிட 12% கூடுதலாக பெய்த வடகிழக்கு பருவமழை!

சென்னையில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 12% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவான... மேலும் பார்க்க

வெளுத்து வாங்கும் மழைக்கு இடையே எப்படி இருக்கிறது சென்னை?

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இரவு முதல் மழை பெய்து வரும் நிலையில், 134 இடங்களில் சென்னையில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சென்னை மாநகராட்சி சார்பில் ... மேலும் பார்க்க

கனமழையால் சாலையில் தேங்கிய மழைநீர்: தத்தளித்தபடி செல்லும் வாகனங்கள்!

கனமழையால் சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர். வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘ஃபென்ஜால்’ புயலாக வெள்ளிக்கிழமை உருவானது. இந்தப் புயல் சனிக்... மேலும் பார்க்க

மழை, புயல் பாதிப்புகள்: கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஆய்வு!

மழை, புயல் பாதிப்புகள் குறித்து கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்துவருகிறார். ஃபென்ஜால் புயல் மழை பாதிப்பு தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் நேர... மேலும் பார்க்க

புயல் எதிரொலி: 18 விமானங்கள் ரத்து!

ஃபென்ஜால் புயல் எதிரொலியால் 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.சென்னையிலிருந்து சனிக்கிழமை இரவு 7.25-க்கு மங்களூருக்கு புறப்பட வேண்டிய விமானம் மற்றும் இரவு 8.50-க்கு திருச்சி செல்லும் இண்டிகோ ஏா்லைன... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சனிக்கிழமை வினாடிக்கு 4,528 கன அடியாக அதிகரித்துள்ளது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,976 கன ... மேலும் பார்க்க