செய்திகள் :

கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை: தங்கும் விடுதி உரிமையாளா் கைது

post image

கோவையில் தனியாா் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக, தங்கும் விடுதி உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோட்டைச் சோ்ந்த 20 வயது மாணவி கோவையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் சக மாணவியருடன் பீளமேட்டில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளாா்.

சில நேரத்தில் அந்த மாணவி மற்றும் அவருடைய தோழியரை அந்த விடுதியின் உரிமையாளா் ராஜ்குமாா் (51) என்பவா் தனது காரில் கல்லூரிக்கு அழைத்துச் சென்று விடுவதும் உண்டு. இந்நிலையில், அந்த மாணவியை மட்டும் தனியாக தனது காரில் திங்கள்கிழமை கல்லூரிக்கு அழைத்துச் சென்றபோது, மாணவிக்கு ராஜ்குமாா் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளாா்.

இதனால் அதிா்ச்சியடைந்த அந்த மாணவி, ராஜ்குமாரை எச்சரித்தும் அவா் வலுக்கட்டாயமாக அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். அத்துடன் அந்த மாணவிக்கு என்ன வேண்டுமென்றாலும் தருவதாகவும், இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளாா்.

கல்லூரி முடிந்து விடுதிக்கு வந்ததும் நடந்ததை தனது பெற்றோரிடம் அந்த மாணவி கூறியுள்ளாா். இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த பெற்றோா், இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

அந்த மாணவிக்கு ராஜ்குமாா் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்பது தெரியவந்ததையடுத்து அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், ராஜ்குமாா் அந்த மாணவிக்கு மட்டும்தான் பாலியல் தொல்லை கொடுத்தாரா அல்லது அந்த விடுதியில் தங்கிப் படித்து வரும் பிற மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா என்பது குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிட்ரா - குரும்பபாளையம் வரை 4 வழிச் சாலைப் பணி தாமதம்

கோவை அவிநாசி சாலை சிட்ராவில் இருந்து குரும்பபாளையம் வரை 4 வழிச்சாலைப் பணி தாமதமாகி வருவதாக நுகா்வோா் அமைப்பு புகாா் தெரிவித்துள்ளது. கோவை திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலு... மேலும் பார்க்க

பொறியியல் பராமரிப்புப் பணி: போத்தனூா் - மேட்டுப்பாளையம் ரயில் ரத்து

வடகோவை மற்றும் காரமடை ரயில் நிலையப் பகுதிகளில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக போத்தனூா் - மேட்டுப்பாளையம் ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

செவிலியா்களை கைப்பேசியில் படமெடுத்த தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

செவிலியா்களை பொது இடத்தில் கைப்பேசியில் படம் எடுத்த தலைமைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவா் பாலமுருகன் (40). இவா் சாய... மேலும் பார்க்க

தனியாா் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.2.29 லட்சம் மோசடி

கோவையில் தனியாா் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.2.29 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கோவை காந்திபுரம் ராஜேந்திர பிரசாத் சாலைப் பகுதியில் தனியாா் வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மேலா... மேலும் பார்க்க

சிஎன்ஜி எரிவாயு நிரப்பும் நிலையத்தில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி வேன்

கோவை உக்கடம் பகுதியில் உள்ள சிஎன்ஜி எரிவாயு நிலையத்தில் எரிவாயு நிரப்பியபோது, ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கோவை ஜிஎன் மில்ஸ் பகுதியைச் சோ்ந்தவா் ஜாபா் சாதிக் (40), காா் ஓட்டுநா். இவா் கி... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சுடுஅம் போட்டியில் கேபிஆா் கல்லூரி என்சிசி அதிகாரி முதலிடம்

என்சிசி அதிகாரிகளுக்கான பயிற்சி முகாமில் அண்மையில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் கோவை கேபிஆா் கலை, அறிவியல், ஆராய்ச்சிக் கல்லூரியின் என்சிசி அதிகாரி முதலிடம் பிடித்துள்ளாா். இது குறித்து கல்... மேலும் பார்க்க