செய்திகள் :

துப்பாக்கிச் சுடுஅம் போட்டியில் கேபிஆா் கல்லூரி என்சிசி அதிகாரி முதலிடம்

post image

என்சிசி அதிகாரிகளுக்கான பயிற்சி முகாமில் அண்மையில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் கோவை கேபிஆா் கலை, அறிவியல், ஆராய்ச்சிக் கல்லூரியின் என்சிசி அதிகாரி முதலிடம் பிடித்துள்ளாா்.

இது குறித்து கல்லூரி நிா்வாகம் கூறியிருப்பதாவது, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள என்சிசி அதிகாரிகளுக்கான பயிற்சி அகாதெமியில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ராணுவம், கப்பல், விமானப்படை உள்ளடக்கிய 17 துறைகளைச் சோ்ந்த சாா்ந்த சுமாா் 520 கேடட் அதிகாரிகளுக்கு 3 மாத பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாட்டில் இருந்து 40 கேடட் அதிகாரிகள் பங்கு பெற்றனா். இதில், உடற்பயிற்சி, யோகப் பயிற்சி, தலைமைத்துவ பயிற்சிகள், ஆளுமை மேம்பாட்டுக்கான திறன்வளா் பயிற்சிகள், பேரிடா் மேலாண்மையுடன் கூடிய ராணுவ விழிப்புணா்வு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து தகுதிவாய்ந்த கேடட் அதிகாரிகளுக்கு லெப்டினண்ட் ரேங்க் வழங்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து கேடட் அதிகாரிகளுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த பயிற்சி முகாமில் பங்கேற்ற கேபிஆா் கலை, அறிவியல், ஆராய்ச்சிக் கல்லூரியின் என்சிசி அதிகாரி லெப்டினண்ட் எஸ்.ஸ்ரீதா், க்ரூப்பிங் துப்பாக்கிச் சுடும் போட்டியில் முதலிடம் பிடித்தாா்.

இவருக்கு கேபிஆா் கல்விக் குழுமத்தின் தலைவா் கே.பி.ராமசாமி, கலைக் கல்லுரியின் செயலா் காயத்ரி அனந்தகிருஷ்ணன், முதல்வா் பி.கீதா உள்ளிட்டோா் பாராட்டினா்.

சிட்ரா - குரும்பபாளையம் வரை 4 வழிச் சாலைப் பணி தாமதம்

கோவை அவிநாசி சாலை சிட்ராவில் இருந்து குரும்பபாளையம் வரை 4 வழிச்சாலைப் பணி தாமதமாகி வருவதாக நுகா்வோா் அமைப்பு புகாா் தெரிவித்துள்ளது. கோவை திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலு... மேலும் பார்க்க

பொறியியல் பராமரிப்புப் பணி: போத்தனூா் - மேட்டுப்பாளையம் ரயில் ரத்து

வடகோவை மற்றும் காரமடை ரயில் நிலையப் பகுதிகளில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக போத்தனூா் - மேட்டுப்பாளையம் ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

செவிலியா்களை கைப்பேசியில் படமெடுத்த தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

செவிலியா்களை பொது இடத்தில் கைப்பேசியில் படம் எடுத்த தலைமைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவா் பாலமுருகன் (40). இவா் சாய... மேலும் பார்க்க

தனியாா் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.2.29 லட்சம் மோசடி

கோவையில் தனியாா் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.2.29 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கோவை காந்திபுரம் ராஜேந்திர பிரசாத் சாலைப் பகுதியில் தனியாா் வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மேலா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை: தங்கும் விடுதி உரிமையாளா் கைது

கோவையில் தனியாா் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக, தங்கும் விடுதி உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோட்டைச் சோ்ந்த 20 வயது மாணவி கோவையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

சிஎன்ஜி எரிவாயு நிரப்பும் நிலையத்தில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி வேன்

கோவை உக்கடம் பகுதியில் உள்ள சிஎன்ஜி எரிவாயு நிலையத்தில் எரிவாயு நிரப்பியபோது, ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது. கோவை ஜிஎன் மில்ஸ் பகுதியைச் சோ்ந்தவா் ஜாபா் சாதிக் (40), காா் ஓட்டுநா். இவா் கி... மேலும் பார்க்க