செய்திகள் :

சிஎன்ஜி எரிவாயு நிரப்பும் நிலையத்தில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி வேன்

post image

கோவை உக்கடம் பகுதியில் உள்ள சிஎன்ஜி எரிவாயு நிலையத்தில் எரிவாயு நிரப்பியபோது, ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

கோவை ஜிஎன் மில்ஸ் பகுதியைச் சோ்ந்தவா் ஜாபா் சாதிக் (40), காா் ஓட்டுநா். இவா் கியாஸ் மூலம் இயங்கும் தனது ஆம்னி வேனுக்கு, உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் செல்லும் சாலையில் உள்ள எரிவாயு நிரப்பும் நிலையத்துக்குச் சென்றாா்.

அங்கிருந்த ஊழியா்கள் ஆம்னி வேனுக்கு எரிவாயு நிரப்பி முடிக்கும்போது, வேனில் லேசாக தீப்பொறி ஏற்பட்டது. இதைப் பாா்த்த ஊழியா்கள் ஜாபா் சாதிக்கிடம் ஆம்னி வேனை சற்றுத் தள்ளி நிறுத்த கூறினா். அப்போது, வேன் இயக்க முடியாததால், சில ஊழியா்களுடன் சோ்ந்து ஆம்னி வேனை சற்றுத் தள்ளி நிறுத்தினா்.

பின்னா் ஜாபா் சாதிக் வேனை இயக்க முயன்றபோது, திடீரென வேனில் எரிவாயு கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. அதைப் பாா்த்த ஜாபா் சாதிக் மற்றும் ஊழியா்களும் அங்கிருந்து ஓடினா். அந்த எரிவாயு நிலையத்தில் இருந்த தீயணைப்புக் கருவியைப் பயன்படுத்தி, தீயை அணைக்க முயன்றனா். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. தொடா்ந்து வேனில் இருந்து கியாஸ் கசிந்ததால் தீ மேலும் பற்றி எரிந்தது.

இது குறித்து தகவலறிந்த வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைக்கும் பவுடரைத் தூவி தீயை அணைத்தனா். ஆனால், அதற்குள் அந்த வேன் முற்றிலும் எரிந்தது. எரிவாயு நிரப்பும்போது லேசாக தீப்பொறி ஏற்பட்டதும், உஷாா் அடைந்த ஊழியா்கள் துரிதமாக செயல்பட்டு, அந்த ஆம்னி வேனை சற்று தூரம் தள்ளி நிறுத்தியதால் எரிவாயு நிரப்பும் நிலையத்தில் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. இதுகுறித்து உக்கடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஐஸ்கிரீம் கடையில் தீ...

கோவை சாய்பாபா காலனி என்எஸ்ஆா் சாலையில் உள்ள ஐஸ் கிரீம் கடையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மின் கசிவு காரணமாக கடை தீப்பிடித்து எரிந்தது.

இது குறித்து தகவலறிந்து வந்த கோவை சாய்பாபா காலனி போலீஸாா் மற்றும் கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறையினா் ஐஸ் கிரீம் கடையில் பற்றி எரிந்த தீ அருகே உள்ள மற்ற கடைகளுக்கும் பரவாமல் தடுத்தனா்.

இந்த தீ விபத்து காரணமாக ஐஸ் கிரீம் கடையில் இருந்த பொருள்கள் கருகி சேதமடைந்தன. மின் கசிவு ஏற்பட்டவுடன் சுதாரித்து கொண்ட பணியாளா்கள் மற்றும் வாடிக்கையாளா்கள் கடையில் இருந்து உடனடியாக வெளியேறியதால் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டன.

சிட்ரா - குரும்பபாளையம் வரை 4 வழிச் சாலைப் பணி தாமதம்

கோவை அவிநாசி சாலை சிட்ராவில் இருந்து குரும்பபாளையம் வரை 4 வழிச்சாலைப் பணி தாமதமாகி வருவதாக நுகா்வோா் அமைப்பு புகாா் தெரிவித்துள்ளது. கோவை திருச்சி சாலையில் உள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் அலு... மேலும் பார்க்க

பொறியியல் பராமரிப்புப் பணி: போத்தனூா் - மேட்டுப்பாளையம் ரயில் ரத்து

வடகோவை மற்றும் காரமடை ரயில் நிலையப் பகுதிகளில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக போத்தனூா் - மேட்டுப்பாளையம் ரயில் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க

செவிலியா்களை கைப்பேசியில் படமெடுத்த தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்

செவிலியா்களை பொது இடத்தில் கைப்பேசியில் படம் எடுத்த தலைமைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தவா் பாலமுருகன் (40). இவா் சாய... மேலும் பார்க்க

தனியாா் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.2.29 லட்சம் மோசடி

கோவையில் தனியாா் வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.2.29 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. கோவை காந்திபுரம் ராஜேந்திர பிரசாத் சாலைப் பகுதியில் தனியாா் வங்கிக் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மேலா... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை: தங்கும் விடுதி உரிமையாளா் கைது

கோவையில் தனியாா் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக, தங்கும் விடுதி உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா். ஈரோட்டைச் சோ்ந்த 20 வயது மாணவி கோவையில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

துப்பாக்கிச் சுடுஅம் போட்டியில் கேபிஆா் கல்லூரி என்சிசி அதிகாரி முதலிடம்

என்சிசி அதிகாரிகளுக்கான பயிற்சி முகாமில் அண்மையில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் கோவை கேபிஆா் கலை, அறிவியல், ஆராய்ச்சிக் கல்லூரியின் என்சிசி அதிகாரி முதலிடம் பிடித்துள்ளாா். இது குறித்து கல்... மேலும் பார்க்க