ஆரஞ்சு ஆர்மியில் இஷான் கிஷன்! ஆனால்.. குறைந்த விலைக்கு ஏலம்!
காங்கிரஸை மகாராஷ்டிர மக்கள் நிராகரித்துள்ளனர்: பாஜக தலைவர்
காங்கிரஸை மகாராஷ்டிர மக்கள் நிராகரித்துள்ளனர் என்று அம்மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவான்குலே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பதை மகாயுதி தலைவர்களும் பாஜக தலைமையும் முடிவு செய்வார்கள். காங்கிரஸை மகாராஷ்டிர மக்கள் நிராகரித்துள்ளனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு எந்தக் கட்சிக்கும் போதிய இடங்கள் கிடைக்காததற்கு காங்கிரஸின் பொய்களே காரணம் என்றார்.
5 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்து.... ரூ. 26 லட்சம் இழப்பீடு பெற்ற நபர்!
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி அமோக வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. மொத்தம் 288 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநிலத்தில் பாஜக கூட்டணிக்கு 230 இடங்கள் கிடைத்துள்ளன. இக்கூட்டணியில் அதிகபட்சமாக பாஜக 132 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.
மற்றொருபுறம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. இக்கூட்டணிக்கு வெறும் 50 இடங்களே கிடைத்துள்ளன. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், அதைவிட அதிக இடங்களை ‘மகாயுதி’ கூட்டணி பெற்றுள்ளது.