நாகூர் சந்தனக்கூடு திருவிழா முன்னேற்பாடு: உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
காஸாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35 பேர் பலி!
மத்திய கிழக்கில் அமைந்துள்ள காஸா பகுதியில் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் போரால் அங்கு கடுமையான உணவுப் பொருள் பஞ்சம் நிலவிவருகிறது. ஹமாஸை ஒடுக்குவதற்காக அங்கு இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டு சண்டையிட்டு வருகிறது.
இந்த நிலையில், காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 35 பேர் உயிரிழந்ததாக காஸா சுகாதாரத்துறை இன்று(நவ. 24) தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் நள்ளிரவில் நடத்திய தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டதாகவும், 94 பேர் காயமுற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் போரால் இதுவரை கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 44,211-ஆக அதிகரித்துள்ளதாக காஸா சுகாதாரத்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இப்போதைய கள நிலவரப்படி, காஸாவின் சுஜாயே நகரை இஸ்ரேல் ராணுவம் முற்றுகையிட்டுள்ளதால் அங்கிருந்து மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காஸாவில் போர்நிறுத்தம் ஏற்படாததால் சண்டை தொடருகிறது.