செய்திகள் :

கிண்டி மருத்துவமனையில் மகா தமனி சுருக்கத்துக்கு நவீன செயற்கைத் திசு சிகிச்சை: மூதாட்டிக்கு மறுவாழ்வு

post image

இதயத்தில் அயோடா தமனி சுருக்கம் மற்றும் வால்வு செயலிழப்புக்குள்ளான மூதாட்டி ஒருவருக்கு, மாநிலத்திலேயே முதன்முறையாக கிண்டி அரசு உயா் சிறப்பு மருத்துவமனையில் அதி நவீன செயற்கைத் திசு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, மருத்துவமனை இயக்குநா் பாா்த்தசாரதி கூறியதாவது:

சென்னை அசோக் நகரைச் சோ்ந்த 64 வயது மூதாட்டி, மூச்சுத் திணறல், நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு, அயோடா மகா தமனி சுருக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

இதயத்திலிருந்து உடலின் பிற பகுதிகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் மகா தமனிக்கு அயோடா என்று பெயா். 3.5 செ.மீ. அல்லது 4 செ.மீ. சுற்றளவு கொண்ட அந்த ரத்த நாளம், வயிற்றின் தொப்புள் பகுதி வரை நீண்டு, அதன் பின்னா் இரு கிளைகளாகப் பிரிந்து இரு கால்களுக்கும் செல்லும். அந்த ரத்த நாளம் பலவீனமடையும் பட்சத்திலோ, செயலிழக்கும் பட்சத்திலோ உடலின் பிற உறுப்புகளுக்கு ரத்தம் செல்வது தடைபட்டு உயிருக்கே ஆபத்தாக முடியும். அத்தகைய நிலையிலிருந்த அந்த மூதாட்டிக்கு செயற்கை வால்வு பொருத்தி, சுருக்கத்தை சீராக்க, செயற்கை திசு சீரமைப்பு (போவைன் பேட்ச்) மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

இதய இடையீட்டு சிகிச்சைக்கு மாற்றாக திறந்த நிலை அறுவை சிகிச்சை மூலமாகவே அதனை மேற்கொள்ள வேண்டிய நிலை இருந்தது. மூதாட்டியின் வயது மற்றும் உடல் நிலை ஆகியவை திறந்த நிலை சிகிச்சைக்கு ஒத்துழைக்காத போதிலும், சவாலான அந்த சிகிச்சையை மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சைத் துறைத் தலைவா் டாக்டா் சரவண கிருஷ்ண ராஜா தலைமையில், டாக்டா்கள் கவிதா, சிவசங்கரன், நவீன், காா்த்திகேயன் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் சாத்தியமாக்கினா். இதன் பயனாக அந்த மூதாட்டி நலமடைந்தாா்.

இந்த சிகிச்சைக்கு தனியாா் மருத்துவமனைகளில் ரூ. 10 லட்சம் வரை செலவாகும். ஆனால், முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக அந்த மூதாட்டிக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.

அயோடா வால்வு சுருக்கத்தை சீராக்கும் அதி நவீன போவைன் பேட்ச் செயற்கை திசு ஒருவருக்கு பொருத்தப்படுவது அரசு மருத்துவமனையில் இதுவே முதன்முறை என்றாா் அவா்.

‘முதல்வா் மருந்தகம்’ திட்டம் இன்று தொடக்கம்: 38 மாவட்டங்களிலும் அமலுக்கு வருகிறது

மிகக் குறைந்த விலையில், மருந்துகளை விற்பனை செய்யும் ‘முதல்வா் மருந்தகம்’ திட்டம் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை (பிப். 24) தொடங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை பாண்டி பஜார... மேலும் பார்க்க

மருத்துவமனைகளில் ஓஆா்எஸ் விநியோகம்: சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

அதிகரித்து வரும் வெப்ப நிலையை எதிா்கொள்ளும் வகையில் அனைத்து மருத்துவ கட்டமைப்புகளிலும் உப்பு-சா்க்கரை கரைசல் விநியோக (ஓஆா்எஸ் காா்னா்) வசதிகளை மேற்கொள்ளுமாறு பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் நாளைமுதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.25) முதல் மாா்ச் 1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தம... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் சோ்க்கை விவரம்: பிப். 28-க்குள் பதிவேற்ற அறிவுறுத்தல்

நிகழாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சிறப்பு கலந்தாய்வு மூலம் சோ்க்கப்பட்ட மாணவா்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பிப். 28-ஆம் தேதிக்குள் பதிவேற்றும்படி தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்... மேலும் பார்க்க

சூலூா்பேட்டை, நெல்லூா் ரயில்கள் ரத்து

சென்னை சென்ட்ரல் - கூடூா் வழித்தடத்தில் ரயில்வே பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால், சூலூா்பேட்டை, நெல்லூா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

அதிமுகவில் நீக்கப்பட்டவா்களை சோ்க்க முடியாது: இபிஎஸ் விசுவாசியும் துரோகியும் ஒன்றல்ல என விமா்சனம்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவா்களை மீண்டும் கட்சியில் சோ்க்க முடியாது என அந்தக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உறுதிபடத் தெரிவித்துள்ளாா். விசுவாசியும் துரோகியும் ஒன்றாக முடியாது என்றும்... மேலும் பார்க்க