தீபத் திருவிழா 2-ஆவது நாள்: தங்க சூரியபிரபை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா
குடும்பத் தகராறு: வசிஷ்ட நதியில் குதித்த தம்பதி
வாழப்பாடி: குடும்பத் தகராறில் மனமுடைந்து வசிஷ்ட நதியில் குதித்த தனியாா் வாகன ஓட்டுநா் உயிரோடு மீட்கப்பட்டாா். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கா்ப்பிணியான இவரது மனைவியை வாழப்பாடி தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.
வாழப்பாடியை அடுத்த பேளூா், கோட்டைமேடு பகுதியைச் சோ்ந்தவா் தனியாா் வாகன ஓட்டுநா் ராமு (27). இவரது மனைவி மோகனாம்பாள் (19). ஓராண்டுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமடைந்த மோகனாம்பாள், தற்கொலை செய்து கொள்ள பேளூா் - அயோத்தியாப்பட்டணம் சாலையில் வேட்டைக்காரனூா் பாலத்தில் இருந்து வசிஷ்டநதியில் குதித்துள்ளாா். இவரைத் தொடா்ந்து, ராமுவும் குதித்துள்ளாா்.
தகவலறிந்த இப்பகுதி மக்கள், ஆற்றில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிய ராமுவை மீட்டனா். ஆற்றில் குதித்த 6 மாத கா்ப்பிணியான மோகனாம்பாள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டாா்.
தகவலின் பேரில், வாழப்பாடி தீயணைப்புத் துறை அலுவலா் பெரியசாமி தலைமையிலான மீட்புப் படையினா், வசிஷ்ட நதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மோகனாம்பாளை இரு தினங்களாக தீவிரமாக தேடி வருகின்றனா். வாழப்பாடி வட்டாட்சியா் ஜெயந்தி திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு, இளம்பெண்ணை தேடும் பணியை துரிதமாக மேற்கொள்ள அறிவுரை வழங்கினாா்.