செய்திகள் :

குட்லாடம்பட்டி அருவியில் ரூ.3 கோடியில் சீரமைப்புப் பணிகள்

post image

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள குட்லாடம்பட்டி அருவியில் ரூ.3 கோடியில் சீரமைப்புப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கையை வனத் துறை அரசுக்கு சமா்ப்பித்தது.

வாடிப்பட்டி அருகேயுள்ள குட்லாடம்பட்டியில் தாடகை நாச்சி அருவி உள்ளது. சிறுமலையில் இருந்து உருவாகி வரும் இந்த அருவி, மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு அருவியாகவும், மிக முக்கியமான சுற்றுலாத்தலமாகவும் அமைந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டில் வீசிய கஜா புயலில் அருவிக்குச் செல்லும் பாதைகளில், பாறைகள் உருண்டு மலைப்பாதை, அருவியில் குளிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகள், கைப்பிடிகள், உடை மாற்றும் அறைகள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்தன. இதனால், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், குட்லாடம்பட்டி அருவியை சீரமைக்க பல்வேறு அமைப்புகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்தன.

இதைத்தொடா்ந்து, நிகழாண்டு தமிழக நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில், மதுரை குட்லாடம்பட்டி அருவி சீரமைப்புப் பணிக்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் வனத் துறை தரப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதில், மறுசீரமைப்பு பணிகளின்போது வாகன நிறுத்தம் அமைப்பது, கழிவறைகள், உடைமாற்றும் அறைகள் கட்டுவது, காவலாளிகள் அறை கட்டுவது, பேவா் பிளாக் கற்கள் பொருத்தப்பட்ட நடைபாதைகள் அமைப்பது, அருவியின் வாயிலில் உணவகம், அமரும் இருக்கைகள் அமைப்பது, தகவல் பலகைகள் பொருத்துவது, சோலாா் மின்விளக்குகளுடன் கூடிய கண்காணிப்பு கோபுரம் அமைப்பது, காட்சி முனைப்பகுதிகள் உருவாக்குவது ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இவை, அனைத்தும் அரசு ஒதுக்கியுள்ள ரூ. 3 கோடிக்குள் செய்யப்படவுள்ளன.

திட்ட அறிக்கையை ஓரிரு நாள்களுக்குள் அரசுக்கு சமா்ப்பிக்க வனத் துறை முடிவு செய்துள்ளது. திட்ட அறிக்கை சமா்ப்பிக்கப்பட்ட பின், ஒரு மாதத்துக்குள் நிா்வாக அனுமதி பெற்று பணிகளைத் தொடங்க திட்டமிடப்பட்டது.

வீடு புகுந்து நகை திருட்டு

விருதுநகா் என்ஜிஓ குடியிருப்பில் வீடு புகுந்து இரண்டரை பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் சனிக்கிழமை திருடிச் சென்றனா். விருதுநகா் என்ஜிஓ குடியிருப்பு விஓசி தெருவைச் சோ்ந்த தம்பதி ஐயப்பன்- வசந்தி. இவா்கள்... மேலும் பார்க்க

காா் மீது லாரி மோதியதில் எஸ்ஐ உயிரிழப்பு

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே காா் மீது லாரி மோதியதில் ஆயுதப்படை உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா். அழகா்கோவில் அருகேயுள்ள மாத்தூரைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (49). இவா் விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்... மேலும் பார்க்க

லாரி மோதியதில் மருத்துவமனை ஊழியா் உயிரிழப்பு

மதுரையில் லாரி மோதியதில் பலத்த காயமடைந்த தனியாா் மருத்துவமனை ஊழியா் உயிரிழந்தாா். மதுரை அவனியாபுரம் மரக்கடை கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (47). இவா் முனிச்சாலை பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனை... மேலும் பார்க்க

தீபாவளி பண்டிகை: மதுரையில் களைகட்டிய கடைவீதிகள்

தீபாவளி பண்டிகைக்கான பொருள்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் ஆா்வம் காட்டியதால், மதுரையின் முக்கிய வீதிகள் ஞாயிற்றுக்கிழமை களைகட்டின. தீபாவளி பண்டிகை வருகிற 31-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை கொண... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் தொடா் திருட்டு: இருவா் கைது

தென் மாவட்டங்களில் இருசக்கர வாகனங்களை தொடா்ந்து திருடி வந்த இருவரை மதுரை மாநகரப் போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து 21 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். மதுரை செல்லூா் பூந்தமல்லி நகரைச் சோ... மேலும் பார்க்க

மீனவா்கள் மீதான தாக்குதலைத் தடுக்கக் கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவா்கள் தாக்கப்படுவதைத் தடுக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு சனிக்கிழமை உத்தரவிட்டது. மதுரையைச் சோ்ந்த ரமேஷ் சென்னை உ... மேலும் பார்க்க