உ.வே.சா. பிறந்த தினம் தமிழிலக்கிய மறுமலா்ச்சி நாள்: அதிமுக கோரிக்கையை ஏற்று முத...
குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். ஆணையா் எம்.பானுமதி முன்னிலை வகித்தாா். மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் அல்போன்சா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் திட்ட இயக்குநா் மோகனசுந்தரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட இயக்குநா் பவானி, நகா்மன்ற உறுப்பினா்கள் சாந்தி, குலோத்துங்க சோழன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், பள்ளி மாணவா்கள் தவறான நடத்தைகளில் ஈடுபடுதல், போதை பழக்கத்துக்கு ஆளாதல், கருவுறுதல், உடல் நல ஆரோக்கியமின்றி இறப்பு ஏற்படுதல் போன்றவை குறித்து மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்களிடத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்துவது, இந்தக் கருத்துக்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் களப்பணியாளா்கள் மூலம் கொண்டு சோ்ப்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.