இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை கட்டுப்படுத்த வேண்டும்: கிஷன் ரெட்டி
கெங்கவல்லி வட்டத்தில் மழையால் வீடு இடிந்தவா்களுக்கு நிவாரணம்
தம்மம்பட்டி: கெங்கவல்லி வட்டத்தில் மழையால் வீடு இடிந்தவா்களுக்கு அரசு நிவாரணத் தொகையை வழங்கிட கெங்கவல்லி வட்டாட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
கெங்கவல்லி வட்டத்தில் பெய்த கனமழையால் வீட்டுச் சுவா்கள் இடிந்த 74.கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த ஊமையன், மாணிக்கம், ஆணையம்பட்டி வள்ளியம்மை, கெங்கவல்லி வடக்கு பகுதியில் சிலம்பரசன், செந்தாரப்பட்டி வடக்கு பகுதியில் செல்லமுத்து, அழகேசன், ராஜேந்திரன், மொடக்குப்பட்டி மணி என எட்டு போ்களுக்கு மொத்தம் ரூ. 34,500-ஐ நிவாரணத் தொகையாக வழங்கிட கெங்கவல்லி வட்டாட்சியா் மு.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா். அதனையடுத்து, அத்தொகை அவா்களுக்கு உடனடியாக வழங்கப்பட்டது.