செய்திகள் :

கேரளா: `பெண்களுக்கு மாதம் ரூ.1000'- புதிய அறிவிப்புகளை வெளியிட்ட பினராயி விஜயன்!

post image

கேரள மாநிலத்தில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதை கருத்தில் கொண்டு இப்போதே பல தாராள திட்டங்களை அறிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன். அதுபோன்று கேரளா பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்ததற்கு ஆளும் சி.பி.எம் கூட்டணியில் உள்ள சி.பி.ஐ கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து அந்த திட்டம் குறித்தும் ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் இதுபோன்ற பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மாநிலத்தில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஏழு பேர் கொண்ட அமைச்சரவை துணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த துணைக் குழுவிற்கு பொதுக் கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி தலைவராகவும்,  அமைச்சர்கள் கே.ராஜன், பி.பிரசாத், ரோஷி அகஸ்டின், பி. ராஜீவ், ஏ.கே.சசீந்திரன், கே. கிருஷ்ணன்குட்டி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். துணைக்குழுவின் ஆய்வு அறிக்கை வெளியிடப்படும் வரை திட்டம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும். இந்த விவரம் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.

P.M Shri
பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைந்த கேரளா

உலகுக்கே முன்மாதிரியாக அதிதீவிர வறுமை ஒழிப்பு நிலையை கையில் எடுத்துள்ளோம். அதன் ஒருபாகமாக பெண்கள் பாதுகாப்புக்காக புதிய திட்டம் தொடங்கப்படும். சமூக பென்சன் பெறாத சமூகத்தில் பின்தங்கிய பெண்கள், திருநங்கைகள் உள்ளிட்டோருக்கு மாதம் 1000 ரூபாய் பெண்கள் பாதுகாப்பு பென்சன் வழங்கப்படும். 35 வயது முதல் 60 வயது வரையிலான 33,34,000 பெண்கள் இதன்மூலம் பயன்பெறுவார்கள். இதற்காக ஆண்டுக்கு 3800 கோடி ரூபாய் செலவிடப்படும். இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் நிதி உதவி வழங்கும் திட்டத்தின்படி 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிகிரி-க்கு பிறகு பயிற்சி வகுப்புகளில் படிப்பவர்களுக்கும், போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் மாதம் 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். இதன்மூலம் 5 லட்சம் இளைஞர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக அரசு ஆண்டுக்கு 600 கோடி செலவிடும்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

குடும்பத்தின் ஐஸ்வர்யம் என்ற அடிப்படையில் பெண்களுக்கு குடும்பஸ்ரீ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய பெண்கள் கூட்டமைப்பாகும். குடும்பஸ்ரீ அமைப்பின் 19470 ஏரியா டெவலப்மெண்ட் சொசைட்டிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதற்காக ஆண்டுக்கு 23.40 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இந்த 3-ம் புதிய திட்டங்களாகும். சமூகத்தில் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு சமூக பாதுகாப்பு பென்சன் மாதம் 1600 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதை மாதம் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். நெல் கொள்முதல் விலையாக கிலோவுக்கு 28.20 வழங்கப்படுகிறது. அது 30 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதி நெருக்கடி தந்தபோதும் இந்த திட்டங்களை எல்லாம் செயல்படுத்துகிறோம். அனைத்து திட்டங்களும் நவம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்" என்றார்.

Delhi Blast: "அந்தக் காட்சிகள் உண்மையிலேயே இதயத்தை உடைக்கின்றன" - மு.க.ஸ்டாலின் அறிக்கை!

டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். வெடிப்பு சம்பவம் குறித்து விசாரணைகள் முடுக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்புப் படை (NSG) மற்றும் தேசிய புலனாய்வு ம... மேலும் பார்க்க

Delhi Car Blast: மும்பை, சென்னை, கோவையில் பாதுகாப்பு அதிகரிப்பு; நிலைமையை ஆராயும் பிரதமர் மோடி!

டெல்லி செங்கோட்டை அருகே நடந்த சக்திவாய்ந்த கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பிற நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல... மேலும் பார்க்க

Delhi Blast: 8 பேர் பலி; மோடி ஆய்வு; நாடு முழுவதும் பதற்றம்! | Live

தமிழகத்தில் பலப்படுத்தப்படும் பாதுகாப்புதமிழகத்தில் பாதுகாப்பு சோதனைகள்"டெல்லி பாதுகாப்பில் அலட்சியம்" - அரவிந்த் கெஜ்ரிவால் கவலைமுன்னாள் Delhi முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், "ரெட் ஃபோர்ட் அருகே வெட... மேலும் பார்க்க

TN -ல் SIR -ஐ எதிர்க்கும் BJP, ஆதரித்து வழக்கு தொடுத்த ADMK | ECI EPS STALIN TVK | Imperfect Show

* SIR: "வாக்குரிமை பறிக்கப்படும் அபாயம்... அச்சமாக இருக்கிறது" - முதல்வர் ஸ்டாலின் சொல்லும் காரணம்* “SIR படிவங்களை அனைத்து வீடுகளுக்கும் வழங்க 8 நாட்களே போதும்” -எடப்பாடி பழனிசாமி* CAA-NRC-ஐ ஆதரித்த அ... மேலும் பார்க்க

``அதிமுக ஆட்சிக்கு வர நினைக்கவில்லை; கட்சி இருந்தால் போதும் என நினைக்கிறார்கள்" - ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டத்தில் டி எம் எஸ் எஸ் பள்ளியில் காணொளி காட்சி மூலம் அன்புச் சோலை திட்டத்தை (முதியோர் பராமரிப்பு மையத்தை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர் ஐ. பெரியசாமி, திண்... மேலும் பார்க்க