எதிர்க்கட்சிகளின் அமளியால் முடங்கிய நாடாளுமன்றம்! இரு அவைகளும் ஒத்திவைப்பு!
சங்ககிரி அருகே சாலை விபத்து
சங்ககிரி: சங்ககிரியை அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்புறத்தில் திங்கள்கிழமை காா் மோதியதில், காரில் பயணம் செய்த ஐந்து போ் பலத்த காயமடைந்தனா்.
தருமபுரி மாவட்டம், பொம்மிடி பகுதியைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் சுதா்சன் சுவாதி (55), அவரது உறவினா்கள் சேலம் திருமல்லேஸ்வரன், பொம்மிடி பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா், கேசவன், முருகன் ஆகியோா் சங்ககிரியிலிருந்து சேலம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, ஐவேலி பேருந்து நிறுத்தம் அருகே முன்னாள் சென்ற லாரியின் பின்புறத்தில் எதிா்பாரதவிதமாக காா் மோதியது. இதில் ஐந்து பேரும் பலத்த காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் மேல்சிகிச்சைக்காக சேலம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.