செய்திகள் :

சத்ரபதி சிவாஜியாக ரிஷப் ஷெட்டி! போஸ்டர் வெளியீடு!

post image

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவாகும் சத்ரபதி சிவாஜி படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கன்னட நடிகராக சின்னச் சின்ன படங்களில் நடித்து வந்த ரிஷப் ஷெட்டி காந்தாரா திரைப்படத்திற்குப் பின் மிகப்பெரிய நட்சத்திர நடிகராக உருவெடுத்துள்ளார். அப்படத்தின் வணிகம் இந்தியா முழுவதும் அவரை பிரபலப்படுத்தியது.

தொடர்ந்து, காந்தாரா - 2 பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே, ஹனுமன் - 2 மற்றும் பிரஷாந்த் நீல் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இதையும் படிக்க: ரஜினி வசூலை முறியடித்த விஜய் சேதுபதி!

இந்த நிலையில், சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கைக் கதையாக உருவாகும் ’சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ படத்தில் சிவாஜியாக ரிஷப் ஷெட்டி நடிக்க உள்ளதை அறிவித்துள்ளனர்.

சந்தீப் சிங் இயக்கும் இப்படத்தின் முதல் அறிவிப்பு போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.

இப்படம் உலகளவில் 21.1.2027 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காந்தாரா படத்திற்குப் பின் மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் ரிஷப் ஷெட்டி ஒப்பந்தமாகி வருவது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஏற்கனவே, நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் சத்ரபதி சிவாஜி வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

ரைபிள் கிளப் டிரைலர்!

ஹிந்தி சினிமாவில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவரது படங்கள் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றுள்ளன.அனுராக் இயக்கத்த... மேலும் பார்க்க

உலக செஸ் சாம்பியன்ஷிப்: மீண்டும் டிராவில் முடிந்த 8ஆவது சுற்று..!

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனும், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இந்திய வீரர் குகேஷும் விளையாடி வருகின்றனர்.14 சுற்றுகளைக் கொண்ட ... மேலும் பார்க்க

மம்மூட்டி - கௌதம் மேனன் பட டீசர்!

இயக்குநர் மகேஷ் நாராயண் இயக்கும் புதிய படத்தில் நடிகர் மம்மூட்டி நாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லாலும் உடன் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்ற... மேலும் பார்க்க

பிக் பாஸ் 8: தகுதி இல்லாத போட்டியாளர் யார்? சிறைக்குச் சென்ற ஜாக்குலின்!

பிக் பாஸ் வீட்டில் விதிக்கப்பட்ட டெவிலும் ஏஞ்சலும் டாஸ்க்கை விளையாட தகுதியே இல்லாத நபர் யார் என்பதைத் தேர்வு செய்தனர்.பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 9வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தில் பாடகர் ஜெஃப்... மேலும் பார்க்க

வணங்கான் வெளியீட்டுத் தேதி!

வணங்கான் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் வணங்கான். இதன் படப்பிடிப்பை பல நாள்களாக நடத்தி சில மாதங்களுக்கு... மேலும் பார்க்க