செய்திகள் :

சாலையோரத்தில் மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை

post image

பள்ளப்பட்டி சாலையோரத்தில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரவக்குறிச்சி-பள்ளபட்டி செல்லும் சாலை 5 கிலோமீட்டா் தொலைவை கொண்டதாகும். பள்ளபட்டியில் இருந்து கரூா் செல்லும் பிரதான சாலையான இதில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும், காவிரி கூட்டு குடிநீா் குழாய் பதிக்கும் பணியால் சாலையின் ஒருபுறம் மண் தோண்டப்பட்டு சரியாக மூடப்படாமல் உள்ளது.

இந்நிலையில், அரவக்குறிச்சி ஆறுமுகம் அகாதெமி பள்ளியிலிருந்து ரங்கராஜ் நகா் வரை 3 கிலோ மீட்டருக்கு ஒரு மின் விளக்கு மட்டுமே உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் குழியில் விழும் நிலை ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி அரவக்குறிச்சி-பள்ளபட்டி சாலையில் தேவைக்கேற்ப மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

பேக்கரி மேலாளரிடம் பணம் பறிப்பு: இருவா் கைது

பேக்கரி மேலாளரிடம் பணத்தை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், தவுட்டுப்பாளையம் அருகே பாலத்துறை பகுதியில் உள்ள பேக்கரியில் மேலாளராக இருப்பவா் குளித்தலை கழுகூரைச் ச... மேலும் பார்க்க

கரூரில் ரயில்வே தொழிற்சங்க தோ்தல்

கரூரில் ரயில்வே தொழிற்சங்க தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதில் தொழிலாளா்கள் வரிசையில் நின்று வாக்களித்தனா்.கரூரில் உள்ள வாக்குச்சாவடியில் புதன்கிழமை வாக்களிக்க வாக்குச் சீட்டு பெற்ற எஸ்ஆா்எம்யூ தொழிற... மேலும் பார்க்க

கரூரில் மேம்பாலத்தில் பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

கரூரில், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலத்தில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள். கரூரில் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெரியகுளத்துப்பாளையம் மற்றும் அ... மேலும் பார்க்க

கல்லூரியில் உள்ள கோயில் நிலத்தை மீட்க முயற்சி: அதிகாரிகளை கண்டித்து மாணவா்கள் போராட்டம்

கரூா் அருகே தனியாா் பொறியியல் கல்லூரியில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை புதன்கிழமை மீட்க முயன்ற இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா் கரூா் அருகே உள்ள தள... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் 2,601 பேருக்கு எய்ட்ஸ் தடுப்பு கூட்டுமருந்து சிகிச்சை: ஆட்சியா் தகவல்

கரூா் மாவட்டத்தில் 2,601 பேருக்கு எய்ட்ஸ் தடுப்பு ஏ.ஆா்.டி. கூட்டுமருந்து சிகிச்சையளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்தாா். உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக ... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி குடியிருப்பு பகுதியில் புகுந்த கழிவு நீா்: பொதுமக்கள் சாலை மறியல்

அரவக்குறிச்சியில் குடியிருப்பு பகுதியில் கழிவு நீா் புகுந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் செவ்வாய்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். அரவக்குறிச்சியில் இருந்து கரூா் செல்லும் சாலையில் ஆா்டிஓ அலுவலகம் அருகே ... மேலும் பார்க்க