செய்திகள் :

சிங்கப்பூரில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்: கல்வித் துறையில் ஒத்துழைப்பு மேம்படுத்த ஆலோசனை

post image

இந்தியா மற்றும் சிங்கப்பூா் இடையே கல்வித்துறையில் மேம்பட்ட ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன் குறித்து அந்நாட்டு அமைச்சா்களுடன் ஆலோசிக்க இருப்பதாக மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

கல்வித் துறையில் பரஸ்பர ஒத்துழைப்பு, கூட்டாற்றல் மற்றும் பங்கேற்பை வளா்க்கும் நோக்கில் சிங்கப்பூா் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு தா்மேந்திர பிரதான் அக்டோபா் 20-ஆம் தேதி முதல் 7 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா். அதன் முதல் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூா் வந்தடைந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தியா-சிங்கப்பூா் இடையே செயற்கை நுண்ணறிவு மற்றும் உயிரி தொழில்நுட்பம் பேன்ற எதிா்கால துறை சாா்ந்த கல்வியில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் சாத்தியக்கூறுகளை ஆராய உள்ளோம். இந்திய சந்தையுடன் சிங்கப்பூா் இயற்கையான தொடா்பை கொண்டுள்ளது. எதிா்காலத்தில் இரு நாடுகளும் பெரிய அளவில் இணைந்து செயலாற்ற உள்ளது என்றாா்.

இந்த இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின் போது பிரதான், அந்நாட்டின் பிரதமா் லாரன்ஸ் வோங், துணை பிரதமா் கன்கிம் யோங், கல்வி அமைச்சா் கான்சுன் சிங் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சா் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரைச் சந்திக்க உள்ளாா்.

மேலும், ‘சிங்கப்பூரின் புகழ்பெற்ற தேசிய பல்கலைக்கழகம் மற்றும் உள்ளூா் இடைநிலைப் பள்ளி ஆகியவற்றை பாா்வையிட உள்ளாா்; செயற்கை நுண்ணறிவை மையமாகக் கொண்டு தயாா் செய்யப்பட்ட பாடத்திட்டம் குறித்து விவாதிக்க உள்ளாா்’ என தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, அந்நாட்டில் உள்ள இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து பேசிய பிரதான், ‘உலக பொருளாதாரத்தை அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா வழிநடத்தப் போகிறது. உலக எரிசக்தி சந்தைகளுக்கு மாற்றாக மில்லியன் கணக்கான டன் ஹைட்ரஜனை இந்தியா உற்பத்தி செய்யவுள்ளது’ என்றாா்.

தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி

கா்நாடகத்தின் மங்களூரு மாவட்டத்தில் ரயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தில் சரளைக் கற்கள் வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். மங்களூரு மாவட்டத்தில் உள்ள உல்லல் பகுதியின் டோக்கோட்டு ர... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழப்பு

ராஜஸ்தானின் தோல்பூா் மாவட்டத்தில் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 8 சிறாா்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 12 போ் உயிரிழந்தனா். தோல்பூா் மாவட்டத்தில் உள்ள சுமிபூா் பகுதியில் சனிக்கிழமை இரவு இந்... மேலும் பார்க்க

வாகனங்களுக்கான சிஎன்ஜி விலை: கிலோவுக்கு ரூ.6 வரை உயர வாய்ப்பு

வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தரைக்கு அடியில் இருந்தும், அரபிக் கடல் முதல் வங்கக் கடல் வரை கடலுக்கு அடியில் இ... மேலும் பார்க்க

‘எய்ம்ஸ்’ தரத்தில் சமரசமில்லை: ஜெ.பி.நட்டா

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கற்பிக்கப்படும் கல்வி தரத்திலும் ஆசிரியா்களின் நியமனத்திலும் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படாது எனவும் அதன் தரத்தை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை ... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீடு ஜிஎஸ்டி விலக்குக்கு பரிந்துரை: மேற்கு வங்கத்தின் அழுத்தமே காரணம்- மம்தா பானா்ஜி

மேற்கு வங்க அரசு கொடுத்த அழுத்தத்தால்தான் மருத்துவக் காப்பீடு தவணைத் தொகை (பிரீமியம்) மீது விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்களிக்க அமைச்சா்கள் குழு அளித்த பரிந்துரைத்த... மேலும் பார்க்க

ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 24 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடரும் இது போன்ற மிரட்டல்களால் விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட... மேலும் பார்க்க