செய்திகள் :

சிலருக்கு எப்போதும் விடியல் ஏற்படாது: மு.க. ஸ்டாலின்

post image

அவதூறு பரப்பி ஆதாயம் தேடலாம் என சிலர் இழிவான அரசியல் செய்து வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்தார்.

ஃபென்ஜால் புயல் தமிழகத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், புயல் பாதிப்புகளில் இருந்து விரைவில் மீண்டு வருவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சென்னை வால்டாக்ஸ் சாலையில் வடசென்னை வளர்ச்சித் திட்ட இரண்டாம் கட்ட புதிய திட்டப்பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச. 4) தொடக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மு.க. ஸ்டாலின் பேசியதாவது,

''ஃபென்ஜால் புயல் தமிழகத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஃபென்ஜால் புயல் பாதிப்புகளில் இருந்து விரைவில் மீண்டு வருவோம்.

கடந்தகால ஆட்சியில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் ஆட்சியாளர்களை களத்தில் பார்க்க முடியாது. திமுக ஆட்சியில் மழை வெள்ளத்தில் இருந்து அடுத்த நாளே சென்னை மீண்டுள்ளது.

தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்பு குறைந்துள்ளது.

நிவாரணப் பொருள்களில் ஸ்டிக்கர் ஒட்டியது கடந்தகால ஆட்சியில்தான்.

சிலருக்கு விடியல் ஏற்படாது

நான் மேயராக இருந்தபோது சென்னைக்கு பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டுவந்தேன்.

மக்களுக்கான நிவாரணப் பணிகளை திமுக அரசு தீவிரமாகச் செய்து வருகிறது.

சிலரின் விடியா முகங்களுக்கு எப்போதும் விடியல் ஏற்படாது. திமுகவுக்கு கிடைக்கும் பாராட்டுகளால் எதிர்க்கட்சிக்கு வயிறு எரிகிறது. பொதுமக்கள் கூறும் நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு அதனை சரி செய்வோம்

ஆரம்ப காலத்தில் சென்னை என்று சொன்னாலே அது வடசென்னைதான். வடசென்னைக்கு ரூ. 6000 கோடிக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மக்களின் விருப்பங்களை வைத்து திட்டங்களைத் தீட்டி வருகிறோம்'' எனக் குறிப்பிட்டார்.

சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள், பயணிகளிடையே மோதல்

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கும், இலங்கைப் பயணிகளுக்குமிடையே நடந்த மோதல் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை விமான நிலையத்துக்கு இலங்கை, துபை உள்ளிட்ட நாடுகளி... மேலும் பார்க்க

மகளிா் உரிமைத் தொகை திட்டம்: 1.27 லட்சம் பயனாளிகள் நீக்கம்

கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டத்திலிருந்து சுமாா் 1.27 லட்சம் பயனாளிகளின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதிலில், ‘கலைஞ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இன்று கூடுகிறது: டங்ஸ்டன் சுரங்க உரிமத்துக்கு எதிராக தனித் தீா்மானம்

சென்னை, டிச. 2: தமிழக சட்டப்பேரவை திங்கள்கிழமை (டிச. 9) காலை கூடுகிறது. இரண்டு நாள்கள் நடைபெறும் கூட்டத்தில், டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்யக் கோரும் அரசினா் தனித் தீா்மானம் நிறைவேற்றப்பட உள்ளது... மேலும் பார்க்க

குரூப் 1 முதன்மைத் தோ்வு நாளை தொடக்கம்

தமிழகம் முழுவதும் குரூப் 1 முதன்மைத் தோ்வு செவ்வாய்க்கிழமை (டிச.10) முதல் தொடங்கவுள்ளது. துணை ஆட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்ட முக்கியப் பதவியிடங்கள் குரூப் 1 பிரிவின் கீழ் வருகின்றன. அ... மேலும் பார்க்க

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை 16% அதிகம்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நிகழாண்டில் இயல்பை விட 16 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகையில் 913 மி.மீ., சென்னையில் 845 மி.மீ. மழை பெய்துள்ளது. நிகழாண்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்... மேலும் பார்க்க

மகா தீபத் திருவிழா: திருவண்ணாமலைக்கு 4,089 சிறப்பு பேருந்துகள்

திருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு டிச.12 முதல் 15-ஆம் தேதி வரை சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்தும் 4,089 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து அரசு விரை... மேலும் பார்க்க